fbpx
BusinessRETamil Newsஅரசியல்இந்தியாதமிழ்நாடு

இந்தியாவை விட பொருளாதாரத்தில் முன்னேறியது வங்கதேசம்!!

புதுடெல்லி: தெற்காசியப் பொருளாதாரங்களில் எப்போதுமே முன்னிலையில் இருக்கும் இந்தியாவை தற்போது வங்கசேதம் ஒரு படி முன்னேறிவிட்டதாக  ஆய்வறிக்கை கூறுகிறது.

ஏசியன் டெவலப்மென்ட் வங்கியின் தரவுகளின்  அடிப்படையில், வங்கதேசப் பொருளாதாரத்தின் வளர்ச்சி, இந்தியாவை விட முன்னேறியதாக காண்பிக்கிறது.

கடந்த 2016ம் ஆண்டிலிருந்து, ஜிடிபி வளர்ச்சி விகிதத்தை இன்றையத் தேதி வரை நாம் ஒப்பிட்டுப் பார்த்தோமானால், 2016 முதல் 2018ம் ஆண்டுவரை சரிவை நோக்கி சென்றிருப்பதை நாம் அறியலாம் என்று தெரிவிக்கிறது.

ஆனால், அதேகாலகட்டத்தில் வங்கதேச நாட்டின் ஜிடிபி வளர்ச்சியை நோக்கி சென்றுள்ளது என்பதும் இங்கு முக்கியமாக குறிப்பிடத்தக்கது.

2016 – 2018 இடைபட்ட காலத்தில், அந்நாட்டின் ஜிடிபி 7.1% என்பதிலிருந்து 7.9% என்பதாக அதிகரித்துள்ளது. மேலும், 2019ம் ஆண்டிலும் வளர்ச்சிக்கான அறிகுறி தென்படுவதாக காட்டப்பட்டுள்ளது.

ஆனால், பெரிய நாடான இந்தியாவிலோ ஜிடிபி வளர்ச்சி கீழ்நோக்கி சென்றுள்ளது. 2016 – 2018 காலகட்டத்தில் ஜிடிபி வளர்ச்சியானது, 7.2% என்பதிலிருந்து 6.5% என்பதாக சரிவை நோக்கி போனது  குறிப்பிடத்தக்கது.

மோடி அரசின் சாதனைகளுள் இதுவும் ஒன்று என்று விமர்சிக்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள் மற்றும் பொதுமக்கள்.

Related Articles

Back to top button
Close
Close