தனது சுயசரிதை புத்தக வெளியீட்டு விழாவில் மனம் திறந்த சோனியா….

காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா, எழுதிய ”Belonging: a journey of Love” என்ற புத்தகம் வெளியிடப்பட்டது. சோனியா, பிரியங்கா, ராகுல் ஆகியோர் இப்புத்தகத்தை வெளியிட்டனர்.இவ்விழாவில் காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்கள், அக்கட்சி மூத்த தலைவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தமிழக முதல்வர் விஜயும் இவ்விழாவில் பங்கேற்றார். நிகழ்ச்சிக்கு வந்த அவரை பிரியங்கா வரவேற்றார்.ராகுல்மற்றும்காங்கிரஸ்பொதுச்செயலர்வேணுகோபால்இடையேவிஜய்க்குஇருக்கைஏற்பாடுசெய்யப்பட்டது.கூட்டணி கட்சிகளான சமாஜ்வாதியின் அகிலேஷ் யாதவ், தேசிய மாநாட்டு கட்சியின் உமர் அப்துல்லா, ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் ஆகியோரும் பங்கேற்றனர். எனது வாழ்க்கையில் மிகவும் கடினமான தருணமும் இருந்தன. மாமியார் கொல்லப்பட்ட தருணம், கணவர் கொல்லப்பட்ட தருணம் போன்ற சில நிகழ்வுகளை நினைவுகூர்வது மிகவும் கடினமாக இருந்தது. நடந்த சம்பவங்களால் நான் மிகுந்த அதிர்ச்சியிலும், நிலைகுலைந்த நிலையிலும், வலியிலும் இருந்ததால், சில விஷயங்களை நான் மறந்து போயிருந்தேன்.இந்திராவை கண்டு நான் மிகவும் பயந்தேன். அவரை எப்படி அணுகுவது அல்லது அவரிடம் என்ன பேசுவது என்று எனக்குத் தெரியவில்லை. மேலும், கணவரும் அவரது சகோதரர் சஞ்சயும் அவரை ‘மா’ (Maa) என்று அழைத்தனர். நானும் அப்படியே அல்லது ‘மம்மி’ என்று அழைக்க வேண்டும் என்று எதிர்பார்த்தனர். அதைச் செய்ய விரும்பவில்லை. என்னைப் பொறுத்தவரை என் சொந்தத் தாயைத் தவிர வேறு யாரையும் ‘மா’ என்று அழைக்க விரும்பவில்லை. எனது தாயையே ‘மா’ என்று அழைத்தேன். இந்திராவை எப்படி அணுகலாம் என்று யோசித்தேன். காலப்போக்கில், அவரை நன்கு புரிந்த பிறகு,
என்னால் அவரை அப்படி அழைக்க முடிந்தது. அதற்கு நீண்டகாலம் தேவைப்பட்டது.அவர் மிகவும் கம்பீரமான ஆளுமை. நான் அவரை மிகுந்த மரியாதையுடனும், அதே சமயம்ஒருவிதஅச்சத்துடனும்பார்த்தேன்.சிலசமயங்களில் அவர் கோபப்படும்போது, என்தந்தையைநினைவூட்டியது; அந்தச் சூழலில் நான் அப்படியேஉறைந்துபோய்விடுவேன். என் கணவரும் அவரது சகோதரர் சஞ்சயும் அமைதியாக அமர்ந்து,அந்தச்சூழல்கடந்துசெல்லும்வரைகாத்திருப்பார்கள். ஆனால், அப்படி நடப்பது அடிக்கடி நிகழவில்லை.ராகுலும் பிரியங்காவும் பிறந்தபோது, அவர் முற்றிலும் மாறிவிட்டார். பெரும்பாலான பாட்டிகளைப் போலவே, அவரும் மிகவும்மென்மையானவராகமாறினார்;அப்போதுதான்அவர்மற்றவர்களைப்புரிந்துகொள்ளும் குணம் கொண்டவர் என்பதை உணர முடிந்தது.என் கணவர் அரசியலில் நுழைவதை கடுமையாக எதிர்த்தேன். எனது மாமியார் பல ஆண்டுகளாக தன் வாழ்நாள் முழுதையும் தனது பணிக்காக அர்ப்பணித்ததை பார்த்து இருப்பேன்.ஒரு வகையில் சற்று சுயநலமாக சொல்லப் போனால், அந்த நெருக்கமான உறவை இழந்துவிடுவேனோ என அஞ்சினேன். ராஜிவ் அரசியலில் ஈடுபட்டபோது, எப்போதும் பயணங்களில் இருந்தார். எங்களது வாழ்க்கையும் மாறியது. ஆனால், எங்களின் பிணைப்பு இன்னும் வலுநடைந்தது. அவர் எங்களுடன் செலவிட கிடைத்த சிறிய நேரமும் எங்களுக்கும், குழந்தைகளுக்கும் மிகவும் முக்கியமானதாக மாறியது இவ்வாறு சோனியா பேசினார். என் பெற்றோரைப் பற்றிப் பல கதைகள் புழக்கத்தில் இருந்தன. அவற்றில் முக்கியமான ஒன்று, அவர்கள் ‘பல்கலை ‘ உணவகத்தில் சந்தித்தது குறித்த கதை. பல ஆண்டுகளுக்குப் பிறகு, நான் கேம்பிரிட்ஜில் இருந்தபோது, என் தோழியை அந்த உணவகத்துக்கு அழைத்து சென்றேன். என் பெற்றோர் எங்கே சந்தித்துக்கொண்டார்கள் என்று பார்க்க விரும்பினேன். மெனு கார்டை கொண்டு வந்த பணியாளரிடம் ‘என் பெற்றோர் இந்த உணவகத்தில்தான் சந்தித்துக்கொண்டார்கள்’ என்று சொன்னேன்.அவர் என்னைப் பார்த்துவிட்டு, ‘ஓ, அவர்களா? எனக்கு அவர்களைத் தெரியுமே!’ என்றார். நான் ஆச்சரியத்துடன், ‘அவர்களைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்?’ என்று கேட்டேன். அதற்கு அவர், ‘ஓ, அந்த இருவரா? நீங்கள் யாரைப் பற்றிச் சொல்கிறீர்கள் என்பது எனக்கு நன்றாகத் தெரியும்’ என்றார். இவ்வாறு ராகுல் பேசினார்.
