Others

பழைய நீடாமங்கலத்தில் மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம்….

பழைய நீடாமங்கலம் முகப்பு வாய்க்காலில் நடைபெறும் தரமற்ற பணிகளை கண்டித்து 
மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிபோராட்டம்  ….    

நீடாமங்கலம் பகுதியில் பழைய நீடாமங்கலம் கிராமத்திற்கு வெண்ணாற்றிலிருந்து பாசன வாய்க்கால் செல்கிறது.பல ஆண்டுகளாக தண்ணீர் செல்லாமலும், பேரூராட்சி பகுதியில் இருந்து வரும் கழிவு நீர் முழுவதும் இந்த வாய்க்காலில் கலந்து சாக்கடையாக மாறியதன் விளைவாக பழைய நீடாமங்கலம் விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.மேலும் மழைக்காலங்களில் சாக்கடை நீர் நிரம்பி காமராஜர் காலனி,காமராஜர் நகர் முழுவதும் சாக்கடை நீர் கலந்து விடுவதால் நோய் தொற்று அபாயத்தையும் மக்கள் சந்திக்கின்றனர். இந்த சூழலில் சமூக ஆர்வலர்கள்,கம்யூனிஸ்ட் கட்சிகளின் சார்பிலும் பல முறை கோரிக்கைகள் வைக்கப்பட்டிருக்கிறது.இந்த நிலையில் பொதுப்பணித்துறை பழைய நீடாமங்கலம் முகப்பு வாய்க்காலை தூர்வாரி சருக்கை கட்டுவதற்காக ரூ 2.5 கோடி (இரண்டரை கோடி)நிதி ஒதுக்கி பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகள் முழுவதும் தரமில்லாமல் மிக மோசமான நிலையில் நடைபெறுகிறது. அதிகாரிகள் வந்து ஆய்வு செய்தாலே உண்மை தெரியும்.அரசு உடனடியாக பணியை பார்வையிட்டு 1.பணிகள் திட்ட மதிப்பிற்கு தகுந்தவாறு தரமாக செய்ய வேண்டும்.
2.வாய்க்காலை சர்வே செய்துபணிகளை துவங்க வேண்டும். 3.வாய்க்கால் கரையை மேம்படுத்த வேண்டும்.4.அருகில் கோயில் உள்ளதால் அதற்கான பாதையை ஒதுக்கி பணியை செய்ய வேண்டும்.உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து நவம்பர் 10 ஆம் தேதிக்கு பிறகு போராட்டத்திற்கு செல்வது எனமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்ஒன்றிய குழுவும், பழைய நீடாமங்களம் கட்சி கிளை மற்றும் பொதுமக்களும் இணைந்துபோராட்டத்தின் நடத்த முடிவெடுத்துள்ளோம். இதற்கு முன்னதாக பணிகள் நடைபெறும் இடத்திற்கு சென்று தலைவர்கள் பார்வையிட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி. கந்தசாமி, என். இராதா,மாவட்டக்குழு உறுப்பினர் வி.எஸ்.கலி பெருமாள்,ஒன்றிய செயலாளர் டி.ஜான் கென்னடி,ஒன்றிய குழு உறுப்பினர்கள் பி. காளியப்பன்,ஜே ராபர்ட் பிரைஸ், எஸ்.ராஜா, பி.ராஜேந்திரன், எம்.குருமூர்த்திஉள்ளனர். )

Related Articles

Back to top button
Close
Close