fbpx
Others

பொன்னேரி சார் – பதிவாளர் உட்பட மூவர் கைது…

பொன்னேரிசார் – பதிவாளர் அலுவலகபொன்னேரிசார் – பதிவாளர் அலுவலகசென்னை, அரும்பாக்கத்தைச் சேர்ந்தவர் நடராஜன், 49. இவர், திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த சிருளப்பாக்கம் கிராமத்தில், இரண்டு வீட்டு மனைகளை வாங்கி, பொன்னேரி சார் – பதிவாளர் அலுவலகத்தில், சமீபத்தில் பத்திரப்பதிவு செய்தார்.அப்போது சார் – பதிவாளர் சங்கர், 52, பத்திரங்களை பின்னர் தருவதாக கூறி, நடராஜனை வீட்டிற்கு அனுப்பியுள்ளார். பின், பத்திரம் வேண்டுமென்றால், 20,000 ரூபாய் லஞ்சம் தரும்படி கேட்டுள்ளார்.இதற்கு உடன்படாத நடராஜன், திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில், இதுகுறித்து புகார் கொடுத்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிவுரையின்படி, நடராஜன், பொன்னேரி சார் – பதிவாளர் சங்கரிடம், ரசாயனம் தடவிய 15,000 மதிப்புள்ள ரூபாய் நோட்டுகளை வழங்கினார்.அங்கு, ஏற்கனவே மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி., ஜெயக்குமார் தலைமையிலான போலீசார், சார் – பதிவாளர் சங்கரை, கையும் களவுமாக கைது செய்தனர்.பொன்னேரி சார் – பதிவாளர் சங்கருக்கு, இடைத்தரகர்களாக செயல்பட்ட பத்திர எழுத்தர் ரமேஷ், 45, பத்திர எழுத்தரின் பெண் உதவியாளர் நித்யா, 40, ஆகியோரையும் கைது செய்தனர்.

Related Articles

Back to top button
Close
Close