திருமாவளவன்விஜய்யை ஆதரிக்க4 முக்கிய டிமாண்ட்….?
தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துக்கு திருமாவளவனின் விசிகவின் ஆதரவு கிடைத்தால் போதும். திருமாவளவன் இன்று காலையில் தனது முடிவை அறிவிக்க உள்ளார். இந்நிலையில் தான் விஜய்யை ஆதரிக்க திருமாவளவன் தனக்கு துணை முதல்வர் பதவி, விஜய் ராஜினாமா செய்யும் சட்டசபை தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்குவது உள்பட 4 முக்கிய டிமாண்ட்டை வைத்துள்ளார். இந்த டிமாண்ட்டை பார்த்து தவெக தரப்பு ஆடிப்போய் உள்ளது.இந்நிலையில் தான் விஜய் கேட்டு கொண்டதற்கு இணங்க விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன் நேற்று ஜூம் மீட்டிங் வழியாக உயர்மட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்தை நடத்தினர். இந்த கூட்டத்தில் எடுத்து கொண்ட முடிவுகள் இன்னும் வெளியாகவில்லை. இதுபற்றி இன்று காலையில் அறிவிப்பதாக திருமாவளவன் கூறியுள்ளார். திருமாவளவன் வைத்திருக்கும் 2 எம்எல்ஏக்களின் ஆதரவு கிடைத்தால் விஜய்யால் எளிதாக ஆட்சியை பிடிக்க முடியும். ஆனால் ஆதரவு கிடைக்காவிட்டால் ஆட்சியை பிடிப்பதில் மீண்டும் இழுபறி நிலவும். இதனால் திருமாவளவனின்முடிவுஎன்பதுதவெகவினரைதிக்திக்மனநிலையில்வைத்துள்ளது.இதற்கிடையே தான் தற்போது இன்னொரு முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அதாவது திமுக கூட்டணியில் இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளியே இருந்து ஆதரவு கொடுப்பதாக தெரிவித்துள்ளன. அதேவேளையில் திருமாவளவன் – தவெக இடையே நடந்த பேச்சுவார்த்தையில் 4 முக்கிய டிமாண்ட்டுகள் வைக்கப்பட்டுள்ளன. அதில் முதல் டிமாண்ட் என்னவென்றால் விசிக ஆட்சி அதிகாரத்தில் பங்கெடுக்கும். அதனை ஏற்க வேண்டும். அதுமட்டுமின்றி தமிழக துணை முதல்வர் பதவி மற்றும் ஒரு கேபினட் அமைச்சர் பதவியை தர வேண்டும் என்று கூறியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த துணை முதல்வர் பதவியில் தொல் திருமாவளவன் அமர முடிவெடுத்துள்ளார் இது முதல் டிமாண்ட் ஆகும்.2வது டிமாண்ட் என்னவென்றால் தற்போது தொல் திருமாவளவன் சிதம்பரம் லோக்சபா தொகுதியின் எம்பியாக உள்ளார். அவர் எம்பியாக துணை முதல்வர் பதவி ஏற்றாலும் கூட அடுத்த 6 மாதத்துக்குள் தமிழகத்தில் எம்எல்ஏவாக வேண்டும். இதனால் விஜய் போட்டியிட்டு வென்ற பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் ஒன்றை ராஜினாமா செய்யும்போது அதனை திருமாவளவனுக்கு வழங்க வேண்டும். அதில் தவெக வேட்பாளரை நிறுத்தாமல் திருமாவளவன் வெற்றி பெற ஆதரிக்க வேண்டும். 3வது டிமாண்ட் என்பது தொல் திருமாவளவன் துணை முதல்வர் மற்றும் எம்எல்ஏ ஆன பிறகு அவர் எம்பியாக இருந்த சிதம்பரம் லோக்சபா தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்படும். இந்த தேர்தலில் போட்டியிடும் விசிக வேட்பாளருக்கு தவெக ஆதரவளிக்க வேண்டும். இது 3வது டிமாண்ட் ஆகும்.4வது டிமாண்ட் என்னவென்றால் பட்டியலின மக்களின் நல்வாழ்வுக்கான சட்டசபை சட்டம் (Legislative ACT for SC Welfare) இயற்ற வேண்டும். இது தலித் அமைப்புகளின் நீண்ட நாள் கோரிக்கையாக உள்ள நிலையில் அதனை நிறைவேற்றம் செய்ய வேண்டும் என்று திருமாவளவன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த டிமாண்டுகளை பார்த்து தவெகவின் விஜய் அரண்டுப்போய் உள்ளார்.திருமாவளவனுக்கு துணை முதல்வர் பதவி வழங்குவதில் தயக்கம் காட்டுகிறார். மாறாக ஒரு கேபினட் அமைச்சர் பதவியை வழங்குவதாக தவெக ரெடியாகி உள்ளது. இதனால் இழுபறி நீடித்து வருவதாக கூறப்படுகிறது.