கோவை-புலி தாக்கி இழுத்துச் சென்ற மூதாட்டி உயிரிழப்பு….

கோவை மாவட்டம் வால்பாறை அடுத்துள்ள சோலையார் அணை சுற்றுவட்டார பகுதியில் இன்று பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் சோகமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. வால்பாறை பகுதியைச் சேர்ந்த இன்னாசியம்மாள் (76) என்ற மூதாட்டி புலி தாக்குதலில் உயிரிழந்தார்.பெறப்பட்ட தகவலின்படி, வயது முதிர்வு மற்றும் பார்வைக் குறைபாடு காரணமாக சரியாக நடக்க முடியாத நிலையில் இருந்த இன்னாசியம்மாள், சம்பவம் நடந்த நேரத்தில் தனது வீட்டின் அருகில் அமர்ந்திருந்ததாக கூறப்படுகிறது. அப்போது திடீரென அருகிலுள்ள காடுகளில் இருந்து வந்த புலி, அவரை தாக்கி இழுத்துச் சென்றுள்ளது.இந்த சம்பவத்தில் இன்னாசியம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்ததும் வனத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் விரைந்து சென்று உடலை மீட்டு மேலதிக நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.மேலும், அந்தப் பகுதியில் தீவிர தேடுதல் மற்றும் கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. புலியின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் மிகுந்தஎச்சரிக்கையுடன் இருக்குமாறு வனத்துறை அறிவுறுத்தியுள்ளது.இந்த சம்பவம் வால்பாறை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெரும் அச்சத்தையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. காட்டு விலங்குகள் குடியிருப்பு பகுதிகளுக்குள் அடிக்கடி நுழைவது குறித்து பொதுமக்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். இதனால், வனத்துறை உடனடி நடவடிக்கை எடுத்து மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணை நடைபெற்று வருகிறது.– கோவை மாவட்ட புகைப்பட கலைஞர் ஜெயப்ரகாஷ் தே