fbpx
Others

80வது சுதந்திர தினம் நாளை கொண்டாட்டம்….

டெல்லி செங்கோட்டை தாக்குதலுக்கு அல்-காய்தா கிளை அமைப்பே காரணம்: ஐநா  பாதுகாப்பு சபை - Latest Tamil News | Tamil Nadu Election News | DMK | ADMK  | BJP | PMK | TVK | NTK | NDA | Congressநாட்டின் 80வது சுதந்திர தினக் கொண்டாட்டம் டில்லி செங்கோட்டையில் நாளை கோலாகலமாக நடைபெற இருக்கிறது. கொத்தளத்தில் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்த இருக்கிறார். மேலும், தேசிய பாடலின் 150 ஆண்டுகளை நினைவு கூறும் விதமாக, செங்கோட்டையில் நடக்கும் நிகழ்ச்சியின் போது, முதல்முறையாக வந்தே மாதரம் பாடல் இசைக்கப்பட உள்ளது.சுதந்திர தினக் கொண்டாட்டத்தையொட்டி, ஜனாதிபதி, துணை ஜனாதிபதி, மத்திய அமைச்சர்கள், விஐபிக்கள் மற்றும் பிரபலங்களும் ஒரே இடத்தில் கூட உள்ளனர்.இந்த நிலையில், அசம்பாவிதம் ஏதும் நிகழாமல் இருக்க, பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. ஒட்டுமொத்த டில்லியில் டில்லி போலீஸ் மற்றும் பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. குறிப்பாக, முக்கிய இடங்களில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.டில்லிக்குள் நுழையும் மற்றும் வெளியேறும் வாகனங்களில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகின்றன. அதேபோல, பொதுமக்கள் பெருமளவில் கூடும் இடங்களிலும் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.சுதந்திர தின விழாவில் கலந்துகொள்ளும் சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக, நாளை காலை 4 மணிக்கே மெட்ரோ ரயில் சேவைகள் தொடங்கப்படும் என டில்லி மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. வழக்கமான சேவைகள் தொடங்கும் வரை அனைத்து வழித்தடங்களிலும் 30 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும் என்றும்தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close