fbpx
RETamil Newsதமிழ்நாடு

தமிழகத்தில் மேலும் 3 புதிய அரசு மருத்துவக்கல்லூரிகள் அமைக்க – மத்தியஅரசு ஒப்புதல்

தமிழகம் முழுவதும் 20க்கும் மேற்பட்ட அரசு மருத்துவக்கல்லூரிகள் இயங்கிவரும் நிலையில் தற்போது 3 புதிய அரசு மருத்துவக்கல்லூரிகள் தமிழகத்தில் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது. இந்த 3 மருத்துவக்கல்லூரிகளும் தலா ரூ.325 கோடி மதிப்பில் அமைக்கப்பட உள்ளது.

தமிழகத்தில் சென்னை, திருச்சி , கோவை, மதுரை உள்ளிட்ட இடங்களில் 20-க்கும் மேற்பட்ட அரசு மருத்துவக்கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றது.

இந்நிலையில் டெல்லியில் கடந்த செப்டம்பர் மாதம் 26-ஆம் தேதி நடைபெற்ற சுகாதாரத்துறை தொழில்நுட்ப மதிப்பீட்டு குழு கூட்டத்தில் , நாடு முழுவதும் புதிதாக 31 மருத்துவக்கல்லூரிகள் தொடங்குவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது.

தமிழகத்தில் அமைந்துள்ள கிருஷ்ணகிரி, நாகை, திருவள்ளூர் என மூன்று இடங்களில் 3 அரசு மருத்துவக்கல்லூரிகளை அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் தமிழகம் முழுவதும் அரசு கல்லூரிகளின் எண்னிக்கை 33-ஆக உயர்ந்துள்ளது.

ஒவ்வொரு மருத்துவக்கல்லூரிகளுக்கும் 150 இடங்கள் என மொத்தம் 450 இடங்கள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மருத்துவ படிப்பிற்க்கான மாணவர்களின் எண்னிக்கை அதிகரிக்கும்.

Related Articles

Back to top button
Close
Close