fbpx
RETamil Newsஅரசியல்தமிழ்நாடு

எச்.ஐ.வி கிருமி இரத்தம் செலுத்தப்பட்ட கர்பிணிக்கும் ,அவரது கணவருக்கும் அரசு வேலை வழங்க நடவடிக்கை – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

கடந்த சில நாட்களுக்கு முன் விருதுநகர் மாவட்டம் சாத்தூரை சேர்ந்த ஆட்டோ டிரைவரின் மனைவியான 9 மாத கர்ப்பிணிக்கு இரத்த சிவப்பணுக்கள் குறைவாக உள்ளதால் சாத்தூர் அரசு மருத்துவமனையில் இரத்தம் செலுத்தப்பட்டது. ஆனால் அந்த அரசு மருத்துவமனை ஊழியர்களின் அலட்சிய குறைவால் எச்.ஐ.வி கிருமி கலந்த இரத்தம் செலுத்தப்பட்டது. அதனால் அந்த கர்பிணி பெண்ணிற்கும் எச்.ஐ.வி கிருமி பாதிப்பு ஏற்பட்டது. இந்த விஷயம் தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களையும் அதிச்சிக்குள்ளாக்கியது.

இவ்வாறு எச்.ஐ.வி கிருமியால் பாதிக்கப்பட்ட அந்த பெண்ணை மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தனி பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் எச்.ஐ.வி கிருமி கலந்த இரத்தம் செலுத்தப்பட்டு , அதனால் பாதிப்புக்குள்ளாகி மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் அந்த பெண்ணை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சந்தித்து அவருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவியாக வழங்கினார்.பின்னர் இதற்கு நிவாரண உதவியும் , அரசு வேலையும் வாங்கித்தருவதாக உறுதி அளித்தார்.

பின் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் அதில் ;

பாதிக்கப்பட்ட பெண்ணிற்கு அவரது சொந்த ஊரிலேயே அவருக்கு வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.மேலும் பாதிக்கப்பட்ட பெண் மற்றும் அவரது கணவர் என இருவருக்கும் அரசு வேலை கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் கூறினார்.

Related Articles

Back to top button
Close
Close