கோவை மாவட்டம் வால்பாறை: வால்பாறையை அடுத்துள்ள பழைய வால்பாறை சாலையில் இன்று மாலை 5 மணியளவில் பெய்த தொடர் மழையின் காரணமாக பெரிய மரம் ஒன்று திடீரென சாலையில் சாய்ந்து விழுந்தது. இதனால் அப்பகுதியில் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்து, சாலையில் விழுந்திருந்த மரத்தை துரிதமாக அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மரம் அகற்றப்பட்டதைத் தொடர்ந்து சாலையில் போக்குவரத்துசீரமைக்கப்பட்டு, வாகனங்கள் வழக்கம்போல் செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.மழை நேரத்திலும் விரைந்து செயல்பட்டு போக்குவரத்தை சீரமைத்த தீயணைப்பு மற்றும்மீட்புத்துறையினருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.கோவை மாவட்ட புகைபட கலைஞர் ஜெயப்ரகாஷ் D



