கோவை மாவட்டம் வால்பாறையில் மழைக்கால பாதுகாப்பு குறித்து தீயணைப்புத்துறை விழிப்புணர்வு…
வால்பாறை: மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், வால்பாறையில் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை அதிகாரிகள் சார்பில் மழைக்கால பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.வால்பாறை மலைப்பகுதியில் தற்போது மழைக்காலம் நிலவி வருவதால், சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டியதன் அவசியம் குறித்து தீயணைப்புத்துறை அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.கனமழையின் போது ஆறுகள், ஓடைகள் மற்றும் நீர்வீழ்ச்சிகளில் திடீரென நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்புள்ளதால், சுற்றுலா பயணிகள் நீர்நிலைகளில் இறங்குவதையும், ஆபத்தான பகுதிகளில் செல்வதையும் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.மேலும், மழைக்காலங்களில் மண்சரிவு, மரங்கள் மற்றும் பாறைகள் விழுதல் உள்ளிட்ட அபாயங்கள் ஏற்படக்கூடிய பகுதிகளில் வாகனங்களை நிறுத்தவோ, தேவையின்றி பயணம் செய்யவோ கூடாது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் மாவட்ட நிர்வாகம், காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை வழங்கும் பாதுகாப்பு அறிவுறுத்தல்களை கடைப்பிடித்து, மழைக்காலங்களில் மிகுந்த விழிப்புணர்வுடனும் பாதுகாப்புடனும் செயல்பட வேண்டும் என தீயணைப்புத்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர். கோவைமாவட்டம் புகைபட கலைஞர் ஜெயப்ரகாஷ் D

