பிலாங்கிங்: ஏ ஜர்னி ஆப் லவ்’ சோனியா
காங்., – பார்லி., குழு தலைவரும், மறைந்த முன்னாள் பிரதமர் ராஜிவின் மனைவியுமான சோனியா, தன் வாழ்க்கை பயணம் குறித்து, ‘பிலாங்கிங்: ஏ ஜர்னி ஆப் லவ்’ என்ற பெயரில் சுயசரிதை எழுதி உள்ளார். இந்த புத்தகத்தை, ‘ஹார்ப்பர் காலின்ஸ் இந்தியா’ நிறுவனம் வெளியிட்டுள்ளது.இந்த புத்தகத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு விழா, டில்லியில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நேற்று நடந்தது. இதில், சோனியா பேசியதாவது: என் வாழ்க்கை பயணத்தை பற்றி எழுத வேண்டும் என, என் நண்பர்கள் பலர் தொடர்ந்து கூறி வந்தனர். என் உள்ளுணர்வுகளை வெளியே சொல்வதில் எனக்கு எப்போதும் தயக்கம் உண்டு.ஆனால், சுயசரிதை எழுதும்படி, மகன் ராகுல், மகள் பிரியங்கா, நெருங்கிய தோழி மஞ்சுளிகா ஆகியோர் தொடர்ந்து என்னை வற்புறுத்தினர்; ஊக்கப்படுத்தினர். அதனால், சுயசரிதை எழுத நானும் சம்மதித்தேன். என் குடும்பம், என் மாமியார் மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா, ராகுல், பிரியங்கா ஆகியோரை பற்றி பொது வெளியில் பல விஷயங்கள் பேசப்படுகின்றன.அவற்றில் பெரும்பாலானவை உண்மைக்கு புறம்பானவை. மனதை புண்படுத்தும் விதமாகவும் பல விஷயங்கள் சொல்லப்படுகின்றன. எனவே, என் கதையை சொல்வதற்கு இதுவே சரியான வழி என, நினைத்தேன். இந்த புத்தகத்தில்,
‘பிலாங்கிங்’ என்ற வார்த்தை மீண்டும் மீண்டும் வருகிறது.என்னை பொறுத்தவரை, இந்த மண்ணிற்கும், கலாசாரத்திற்கும் சொந்தமானவளாக மாற எவ்வளவு கடினமாக முயற்சி செய்தேன் என்பதை இது குறிக்கிறது. நீங்கள் ஒரு வெளியாளாக இருக்கும் போது, யாரோஉங்களைஎப்போதும்கண்காணிப்பதுபோன்றும்,எங்கேதவறுசெய்துவிடுவோமோஅல்லதுதவறானவார்த்தையை பேசி விடுவோமோ என்ற அழுத்தமும் இருக்கும்.இது, எனக்கு மட்டுமல்ல. நாட்டில் உள்ள பல பெண்களின் வாழ்க்கையிலும் இது தான்நடக்கிறது.அவர்கள்திருமணமாகிஒருபுதியவீட்டிற்குள்நுழையும்போது,மாமியார்வீட்டாரின்பழக்கவழக்கங்கள்முற்றிலும்மாறுபட்டதாக இருக்கலாம். எனினும், அவர்களின் வழிமுறைகளுக்கு ஏற்ப தங்களை மாற்றி, அவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப பெண்கள் நடக்க வேண்டியுள்ளது.நான் முற்றிலும் மாறுபட்ட சமூக மற்றும் கலாசார சூழலிலிருந்து வந்ததால்,எனக்குஇதுசற்றுகடினமாகஇருந்திருக்கலாம்.ஆனால்,இந்தியபெண்களுக்கும்புகுந்தவீட்டில்ஏற்றுக்கொள்ளப்படுவது என்பது அதே அளவுக்கு கடினமானதாகவே உள்ளது. அதனால் தான் என் புத்தகத்திற்கு, ‘பிலாங்கிங்’ என, தலைப்பிட்டேன். இவ்வாறு சோனியா பேசினார்.
