fbpx
GeneralRETamil NewsTrending Nowஉலகம்

உலகம் முழுவதும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை..! 1 கோடியே 56 லட்சத்தை கடந்து அதிர்ச்சி!

World corona cases crosses 1.56 crore

ஜெனீவா:

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 56 லட்சத்தை கடந்துள்ளது.

சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. உலகின் 213 நாடுகளில் பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவியவர்களின் எண்ணிக்கை 1 கோடியே 56 லட்சத்தை கடந்துள்ளது. தற்போதைய நிலவரப்படி, 1 கோடியே 56 லட்சத்து 41 ஆயிரத்து 906 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 95 லட்சத்து 35 ஆயிரத்து 208 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆனாலும், கொரோனாவால் இதுவரை 6 லட்சத்து 30 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

 

Tags

Related Articles

Back to top button
Close
Close