fbpx
RETamil Newsஇந்தியாதமிழ்நாடு

மூன்று மண்டலமாக பிரிக்கப்பட்ட தமிழ்நாடு- சில தளர்வுகளுடன் கடைப்பிடிக்கப்படும் ஊரடங்கு!

Tamil Nadu divided into three zones - curfew with some relaxation!

மே 17ஆம் தேதி வரை ஊரடங்கை மத்தியரசு நீடித்துள்ளது. அதோடு சிவப்பு, ஆரஞ்ச், பச்சை மண்டலத்தில் எதுவெல்லாம் இயங்கக் கூடும் என்பதை பற்றியும் அறிவித்துள்ளது.

இதில் வைரஸ் எண்ணிக்கை குறைவாக உள்ள ஆரஞ்சு மண்டலத்தில் டாக்சி சேவைக்கு அனுமதி கிடைத்துள்ளது.

வைரஸ் இல்லாத பகுதியான பச்சை மண்டலத்தில் 50% பேருந்துகள் இயக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. பேருந்தில் 60 பேர் கொண்ட இருக்கை இருந்தால் அதில் 30 பேர் மட்டுமே பயணிக்க முடியும்.

அதே நேரத்தில் பச்சை மண்டலப் பகுதிகளில் மதுபானக்கடை , பான் மசாலா கடைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதே நேரத்தில் மத்திய அரசு அறிவித்துள்ள அறிக்கையின்படி 130 மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்திலும், 284 மாவட்டங்கள் ஆரஞ்ச் மண்டலத்திலும், 319 மாவட்டங்கள் பச்சை மண்டலத்திலும் இடம்பெற்றுள்ளது.

டெல்லி, மும்பை,சென்னை, கொல்கத்தா, அகமதாபாத் ஆகிய நகரங்களில் பாதிப்பு எண்ணிக்கை அதிகம் காணப்படுவதால் மே 3 க்கு பிறகும் எந்தவித விதிமுறைகளும் தளர்த்தப் படாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் மட்டும் தற்போது 12 மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்தில் இடம் பெற்றுள்ளது. அவை சென்னை,திருவள்ளூர்,காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர்,ராணிப்பேட்டை,நாமக்கல், தஞ்சை, திருவாரூர், திருப்பூர், மதுரை மற்றும் விருதுநகர் .

ஆரஞ்ச் மண்டலத்தில் இடம்பெற்ற மாவட்டங்கள் திருவண்ணாமலை, விழுப்புரம்,கள்ளக்குறிச்சி,திருப்பத்தூர்,தர்மபுரி, சேலம், ஈரோடு,நீலகிரி, கோவை, கடலூர், பெரம்பலூர்,அரியலூர்,சிவகங்கை, ராமநாதபுரம், தேனி, தூத்துக்குடி,திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் நாகை.

இதில் கொரோனா வைரசால் பாதிக்கப்படாத கிருஷ்ணகிரி மாவட்டம் ஒன்று மட்டுமே தற்போது பச்சை மண்டலத்தில் இடம் பெற்றுள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close