fbpx
Others

அமைச்​சர்.சிவசங்​கர்-அதிக கட்​ட​ணம் வசூலிக்​கும் ஆம்னி பேருந்​துகள் மீது உரியநடவடிக்கை…

அண்டை மாநிலங்களுக்கு செல்லும் அரசு பேருந்து கட்டண உயர்வு பட்டியல் தயார்-  அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் | Tamil News Minister SS Sivasankar says  Government bus fare hike ...அதிக கட்​ட​ணம் வசூலிக்​கும் ஆம்னி பேருந்​துகள் கட்​ட​ணத்தை குறைக்​கா​விட்​டால் உரிய நடவடிக்கை எடுக்​கப்​படும் என போக்​கு​வரத்து மற்​றும் மின்​சா​ரத் துறை அமைச்​சர் எஸ்​.எஸ்​.சிவசங்​கர் தெரி​வித்​தார்.அரியலூர் மாவட்​டம் திரு​மானூர் மற்​றும் ஆண்​டிமடத்​தில் புதிய தீயணைப்பு நிலை​யங்​கள், ஆதனூர் கிராமத்​திலிருந்து அரியலூருக்கு அரசு பேருந்து சேவை, ஆதனூர்- மழவ​ராயநல்​லூர் இடையே மருதை​யாற்​றின் குறுக்கே ரூ.14.35 கோடி​யில் கட்​டப்​பட்ட உயர்​மட்ட பாலம் திறப்பு ஆகிய நிகழ்ச்​சிகள் அந்த பகு​தி​களில் நேற்று நடை​பெற்​றன.நிகழ்ச்​சிகளுக்கு ஆட்​சி​யர் பொ.ரத்​தின​சாமி தலைமை வகித்​தார். எம்​எல்​ஏக்​கள் கு.சின்​னப்​பா, க.சொ.க.கண்​ணன் ஆகியோர் முன்​னிலை வகித்​தனர். போக்​கு​வரத்து மற்​றும் மின்​சா​ரத் துறை அமைச்​சர் எஸ்​.எஸ்​.சிவசங்​கர் பங்​கேற்று தீயணைப்பு வாக​னங்​கள் மற்​றும்தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 20 ஆயிரம் சிறப்பு பேருந்துகள்: போக்குவரத்து  துறை அமைச்சர் தகவல் | special buses for Diwali festival - hindutamil.in பேருந்தை கொடியசைத்து தொடங்கி வைத்​தார். தொடர்ந்து உயர்​மட்ட பாலத்தை பொது​மக்​கள் பயன்​பாட்​டுக்கு திறந்து வைத்​தார்.பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் அமைச்​சர் கூறியது: தீபாவளி பண்​டிகைக்​காக கடந்த ஆண்​டைப் போல இந்த ஆண்​டும் ஒப்​பந்த அடிப்​படை​யில் தனி​யார் பேருந்​துகள் இயக்​கப்பட உள்​ளன. கடந்த ஆயுத​பூஜை விடு​முறை​யின்​போது ஒரு சில ஆம்னி பேருந்துகள் கூடு​தல் கட்​ட​ணம் வசூலித்​த​தாக வந்த புகார்​களின்​பேரில் உரிய நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது.இதே​ல,தீபாவளியையொட்டி தற்​போது சில ஆம்னி நிறு​வனங்​கள் கூடு​தல் கட்​ட​ணம் வசூலிப்​ப​தாக புகார் வந்​துள்​ளது. இதுதொடர்​பாக ஆம்னி பேருந்து உரிமை​யாளர்​கள் சங்க நிர்​வாகி​களு​டன் பேசி, உரிய கட்​ட​ணம் வசூலிக்​கு​மாறு அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளது. அவர்​கள் அந்​தக் கட்​ட​ணத்​தைக் குறைக்​கா​விட்​டால், அந்​தப் பேருந்​துகள் மீது தீபாவளிக்கு முன்​பாகவே நடவடிக்கை எடுக்​கப்​படும்.அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி பாலை​வனத்​தில் அரசி​யல் பயணம் செய்து கொண்​டிருக்​கிறார், எங்​கே​யா​வது வசந்​தம் கிடைக்​காதா என்று பார்க்​கிறார். கானல்​நீரைபார்த்துஉண்மை என நினைத்து பேசிக்​கொண்​டிருக்​கிறார். காலம் அவருக்கு பதில் சொல்​லும் என்​றார்​.

Related Articles

Back to top button
Close
Close