செங்குன்றம்–நகைகடை உரிமையாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம்..

நகைஉரிமைக்கடைக்கார்களுடன் ஆலோசனைக் கூட்டம்!செங்குன்றம் காவல்துறை சார்பாக நடந்தது!! ஆவடி காவல் ஆணையரகம் செங்குன்றம் காவல் மாவட்டத்திற்குட்பட்ட செங்குன்றம் காவல் நிலைய எல்லையில் செயல்படும் நகைக்கடை உரிமையாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் செங்குன்றம் காவல் மாவட்ட துணை ஆணையர் பாலாஜி, செங்குன்றம் காவல் சரக உதவி ஆணையர் ராஜா ராபர்ட் ஆகியோர் ஆலோசனையின் பேரில் செங்குன்றம் காவல் நிலைய ஆய்வாளர்கள் விஜயகுமார், லதா மகேஸ்வரி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் நகைக்கடை உரிமையாளர் கள் தங்கள் கடைகளில் சி.சி.டி.வி கேமரா பொறுத்த வேண்டும்,பாதுகாப்புப் பணிக்கு ஆட்களை நியமிக்கவேண்டுமென்றும்,கடையின்பாதுகாப்பைஉறுதிசெய்துகொள்ளவேண்டுமென்றும், நகைகளைபாதுகாப்பாகவைத்திருக்கஅனைத்து ஏற்பாடுகளையும் செய்ய வேண்டுமென காவல் ஆய்வாளர்கள் அறிவுறுத்தினர். கூட்டத்தில் உதவி ஆய்வாளர்கள் ஆன்டிலின் ரமேஷ், ஜனார்த்தனம், மற்றும் நகைக்கடை உரிமையாளர்கள் கலந்துகொண்டனர்.