fbpx
HealthTamil Newsஉணவு

இரத்த சோகையை குணமாக்க இயற்க்கை மருத்துவம்!

உடலில் இரத்த சிவப்பணுக்கள் அல்லது ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருப்பதால் இரத்தசோகை ஏற்படும். பொதுவாக இந்த பிரச்சனை குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு தான் அதிகம் ஏற்படும். ஒருவருக்கு இரத்த சோகை இருந்தால், அதை ஒருசில அறிகுறிகள் வெளிப்படுத்தும்.

அவை களைப்பு, சோம்பேறித்தனத்தை உணர்வது, மூச்சுவிடுவதில் சிரமம், படபடப்பு மற்றும் எதிலும் சரியாக கவனம் செலுத்த முடியாமல் இருப்பது போன்றவை. இரத்த சோகை பிரச்சனையானது மாதவிடாய் காலத்தில் அளவுக்கு அதிகமாக இரத்தப் போக்கு, நாள்பட்ட இரும்புச்சத்து குறைபாடு, சிறுநீரக பிரச்சனைகள், ஊட்டச்சத்துக் குறைபாடுகளினால் வரும்.

இந்த இரத்த சோகைக்கு சிகிச்சையளிக்க சிறந்த வழி உடலில் இரும்புச்சத்தின் அளவை அதிகரிப்பது தான். இங்கு இரத்த சோகையை சரிசெய்வதற்கான சில எளிய இயற்க்கை வைத்தியங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

காய்கறிகள் மற்றும் பழங்கள்
பழங்களில் வாழைப்பழம், ஆப்பிள், மாதுளை, திராட்சை மற்றும் காய்கறிகளில் கேரட், நெல்லிக்காய், தக்காளி போன்றவற்றில் இரும்புச்சத்து உள்ளது. எனவே இவை அனைத்தையும் கொண்டு சாலட் செய்து, அத்துடன் தேன் சேர்த்து உட்கொண்டு வர, இரத்த சோகையில் இருந்து விடுபடலாம்.

பாதாம்:
இரத்த சோகை இருப்பவர்கள், பாதாமை தினமும் உட்கொண்டு வந்தால், ஹீமோகுளோபின் அளவு வேகமாக அதிகரிக்கும்.

பேரிச்சம் பழம்:
பேரிச்சம் பழத்தை தேனில் ஊற வைத்து, தினமும் 2 பேரிச்சம் பழம் உட்கொண்டு வந்தால், உடலில் இரத்த சிவப்பணுக்களின் அளவை அதிகரித்து, இரத்த சோகையைப் போக்கலாம்.

வெள்ளரிக்காய்:
உடலில் பொட்டாசியம் குறைவாக இருந்தாலும், இரத்த சோகை ஏற்படும். அன்றாட உணவில் வெள்ளரிக்காயை சேர்த்து வாருங்கள். வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து மட்டுமின்றி, பொட்டாசியம் ஏராளமாக நிறைந்துள்ளது.

ஆப்பிள்-பீட்ரூட்-பசலைக்கீரை ஜூஸ்:
இரத்த சோகை பிரச்சனை இருப்பவர்கள், பழங்களில் ஆப்பிள் ஜூஸ் மற்றும் காய்கறி ஜூஸ்களில் பீட்ரூட், பசலைக்கீரை போன்றவற்றைக் கொண்டு ஜூஸ் செய்து தினமும் குடித்து வருவதன் மூலம் இரத்த சோகையைப் போக்கலாம்.

தேன்:
தேனில் இரும்புச்சத்து ஏராளமாக நிறைந்துள்ளதால், இவற்றை சர்க்கரைக்கு பதிலாக பயன்படுத்தி வர, உடலில் இரத்த சிவப்பணுக்களின் அளவை அதிகரிக்கலாம்.

வைட்டமின் சி உணவுகள்:
இரத்த சோகை இருப்பவர்கள் வைட்டமின் சி நிறைந்த உணவுகளை உட்கொள்வது நல்லது. ஏனெனில் வைட்டமின் சி சத்து தான் உடலில் இரும்புச்சத்து உறிஞ்ச உதவும்.

Related Articles

Back to top button
Close
Close