fbpx
REஉலகம்

மனிதனால் வைரஸை உருவாக்க முடியாது கூறுகிறார் – சீன அறிவியல் ஆராய்ச்சியாளர்

உலகையே இன்று அல்லோலப்பட வைத்துக்கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்று , வுகாண் நகரில் உள்ள கடல் வாழ் உயிரினங்கள் சந்தையில் இருந்து தோன்றியதாக கூறப்பட்டு வருகிறது

இதில் திடீர் திருப்பமாக ” உலகையே அச்சுறுத்தி வருகின்ற இந்த கொரோனா வைரஸ் வுகான் நகரில் உள்ள வைராலஜி இன்ஸ்டிடியூட்டின் ஆய்வுகூடத்தில் உருவாக்கப்பட்டது என்றும் அது தப்பித்து வந்துள்ளது ” என்று பாக்ஸ் நியூஸ் டெலிவிஷன் செய்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக விசாரணை நடத்துவதாகவும், அதன் உண்மை தன்மை நடந்தது என்ன? என்பதை .கண்டுபிடிக்க போவதாகவும் அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி மேலும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

அதுமட்டும் அல்லாமல் அந்த இன்ஸ்டிடியூட்டிற்க்கு கொடுத்து வந்த நிதி உதவி நிறுத்தப்படும் என்றும் அவர் அறிவித்து உள்ளார்.

இந்நிலையில் அந்த சர்ச்சைக்குரிய ஆய்வுகூடத்தின் இயக்குனர் யுவான் ஜிமிக் அரசின் சி ஜி டி என் டெலிவிஷனுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது;

எங்கள் நிறுவனத்தில் என்ன வகையான ஆராய்ச்சி நடக்கிறது? நிறுவனம் எவ்வாறு செயல்படுகிறது? என்பதை நாங்கள் அறிவோம்.

வைரஸ் எங்களிடம் இருந்து வருவதற்கு வாய்ப்பு கிடையாது.

எங்களிடம் கடுமையான ஒழுங்குமுறை விதிகள் உள்ளன. விதிமுறைகளும் இருக்கின்றன. எனவே நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம்.

எங்கள் ஆய்வுகூடத்தில் செயற்கையாக கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்டு , அங்கிருந்து தான் வெளியே வந்துவிட்டதாக அமெரிக்கா கூறும் புகார்கள் அர்த்தமற்றது.

சிலர் எந்தவித ஆதாரமும் இல்லாமல் மக்களை தவறான வழியில் நடத்துகின்றனர். இது முழுக்க முழுக்க யுகத்தின் அடிப்படையிலானது.

ஒரு விஞ்ஞயானி என்ற முறையில் , அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மேலாளர் என்ற விதத்திலும், அது சாத்தியம் அற்றது.

வைரசை மனிதனால் உருவாக்க முடியாது.கொரோனா வைரஸ் செயற்கையானது என நிரூபிக்க எந்த ஆதாரமும் இல்லை.

சில ஆராய்ச்சியாளர்கள் ஒரு வைரஸை தொகுக்க அசாதாரண நுண்ணறிவும் , மிகப்பெரிய உழைப்பும் தேவை என்று நம்புகின்றனர்.

எனவே இது போன்ற வைரஸை உருவாக்குகிற திறன் , தற்போது மனிதர்களிடம் உள்ளது என்று நாங்கள் நம்பவில்லை.

கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்த உடனே , அந்த வைரஸின் மரபணு வரிசையையும் மேம்பாடு பற்றிய சமீபத்திய ஆராய்ச்சியையும் உலக சுகாதார நிறுவனத்துடனும் பகிர்ந்து கொண்டோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close