fbpx
GeneralRETamil NewsTrending Nowஉலகம்

கொரோனா இருக்கட்டும்…! தளர்வுகளை அறிவித்த மாஸ்கோ…!

Moscow announces relaxation over corona

மாஸ்கோ:

கொரோனா பரவலுக்கு இடையில் ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன.

கொரோனா வைரசால் அதிகம் பாதிக்கப்பட்ட  நாடுகளில் அமெரிக்கா, பிரேசில், ரஷ்யா, இந்தியா போன்ற நாடுகள் முதல் 4 இடங்களில் உள்ளன.

குறிப்பாக ரஷ்யாவில் 7,284 பேர் உயிரிழந்துள்ளனர்.

தலைநகர் மாஸ்கோவில் மட்டும் 2,08,680 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,386 பேர் பலியாகிவிட்டனர்.

ஆனால் இறப்பு எண்ணிக்கை குறைவாக உள்ளது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்று உலக சுகாதார அமைப்பு குற்றம்சாட்டியது.

இந்நிலையில், தலைநகர் மாஸ்கோவில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. அதன் படி, 2 மாதங்களுக்குப் பிறகு மியூசியம், உணவு விடுதிகள் உள்ளிட்டவை திறக்கப்பட்டு உள்ளன.

மக்கள் நடமாட அனுமதிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று வீரியமாக உள்ள நிலையில்  ஊரடங்கு தளர்வு பற்றி பல விமர்சனங்கள் எழுந்துள்ளன.

Tags

Related Articles

Back to top button
Close
Close