fbpx
REதமிழ்நாடுவிவசாயம்

விவசாயத்தில் நெல் சாகுபடியை பற்றி காண்போம்

learn about paddy cultivation in agriculture

நெல் முதன்முதலாக தென்கிழக்காசியாவில் தோன்றியது. இது புல் வகையை சேர்ந்த ஒரு வகைத் தாவரம் ஆகும். நெற்பயிர் ஈரநிலங்களில் வளரக்கூடிய தன்மை கொண்டது.

நெற்பயிர் குறைந்தது ஐந்து மாதங்கள் வரை வளரும். இப்பயிரின் மேலுறையில் உமி என அழைக்கப்படும் ஒரு விதை இருக்கும். இதை நீக்கியபின் நெற்பயிர் அரிசி என்று அழைக்கப்படுகிறது. இதன்பிறகு, இது உணவாகப் பயன்படுத்தப்படுகிறது.

உலகில் முதன்முறையாக இரண்டு வகை நெற்பயிர்கள் பயிரிடப்பட்டன. அவை ஆசியா நெல்  (Oryza Sativa),  ஆப்பிரிக்கா நெல் (Oryza glaberimma)ஆகும். இதில் ஆசிய நெல் இமயமலை அடிவாரத்தில் தோன்றியதாக கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக திருவாரூர், விழுப்புரம், நாகப்பட்டினம், ராமநாதபுரம் ,தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.

இந்தியாவில் சுமார் 2,00,000க்கும் மேற்பட்ட நெல் வகைகள் இருந்ததாக அறியப்படுகிறது. அதில் சில வகை:

  • நவரை
  • கார்
  • கல்லுண்டை
  • கருடன் சம்பா
  • வாடன் சம்பா
  • சீரகச்சம்பா
  • நெய் கிச்சி.

நம் பாரம்பரியமான நெல் வகைகளை போற்றும் வகையில் ஆண்டு தோறும் திருத்துறைப்பூண்டி அருகேயுள்ள ஆதிரெங்கம் கிராமத்தில் நெல் திருவிழா நடத்தப்படுகிறது. இதன் அமைப்பின் பெயர் ‘ நமது நெல்லை காப்போம்’.

உலகில் வாழும் பெரும்பாலான மக்களின் அன்றாட உணவாக அரிசி இருக்கிறது. இது நெற்பயிரில் இருந்தே கிடைக்கிறது.

மேலும் நெல்லின் மகிமையை போற்றும் வகையில் அவ்வையார் போன்ற புலவர்கள் தம் நூலின் பாடலில் பாடியுள்ளனர். நெல்லை பற்றி சில சமஸ்கிருத குறிப்புகளும் உள்ளது.

கோதுமை சோளத்திற்கு அடுத்து அதிகப்படியாக பயிரிடப்படுவது நெல். நெல் விளையும் பகுதிகளில் நெல் நடுதல், நெல் அறுவடை போன்ற பண்டிகைகளும் நடத்தப்பட்டு வருகின்றன.

 

Tags

Related Articles

Back to top button
Close
Close