fbpx
GeneralRETamil NewsTrending Nowஅரசியல்இந்தியா

கேரளாவில் தீவிரமாக பரவும் கொரோனா.. ஒரே நாளில் 416 பேருக்கு தொற்று!

Kerala 416 corona cases in one day

திருவனந்தபுரம்:

கேரளாவில் ஒரே நாளில் புதிதாக 416 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

கடந்த சில நாட்களாக கேரளாவில் 300 ஐ தாண்டி கொரோனா தொற்று எண்ணிக்கை வந்த நிலையில் நேற்று புதிய திருப்பமாக தொற்று கண்டறியப்பட்டவர்களின் எண்ணிக்கை 416 ஆக உள்ளது. புதிதாக தொற்று ஏற்பட்டவர்களில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் 123 பேருக்கும், வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் 51 பேருக்கும், தொற்று மூலாக 204 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

மாநிலத்தில் இதுவரை கொரோனாவுக்கு 27 பேர் பலியாகி உள்ளனர். தொற்று கண்டறியப்பட்டவர்களில் 129 பேர் திருவனந்தபுரம் மாவட்டத்தையும், 50 பேர் ஆலப்புழா மாவட்டத்தையும், 41 பேர் மலப்புரம் மாவட்டத்தையும், 32 பேர் பத்தனம்திட்டா மாவட்டத்தையும் சேர்ந்தவர்கள்.

28 பேர் தலா பாலக்காடு மற்றும் கொல்லம் மாவட்டங்களையும், 20 பேர் எர்ணாகுளம் மாவட்டத்தையும், 17 பேர் திருச்சூர் மற்றும் காசர்கோடு மாவட்டங்களையும், தலா 12 பேர் இடுக்கி மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களையும், 7 பேர் கோட்டயம் மாவட்டங்களையும் சேர்ந்தவர்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே நாளில் 112 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்தனர். கடந்த 24 மணி நேரத்தில் மாநிலத்தில் 11,693 சோதனைகள் நடத்தப்பட்டன. பல்வேறு மாவட்டங்களில் மொத்தம் 1,84,112 பேர் கண்காணிப்பில் உள்ளனர். இவர்களில் 3,517 பேர் மருத்துவமனைகளில் உள்ளனர் என்று மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close