fbpx
RETamil News

கொரோனா பாதிப்பை அடுத்து எதிர்க்கட்சி தலைவர்களுடன் 8-ஆம் தேதி மோடி ஆலோசனை

நாடு முழுவது கொரோனா தோற்று அதிகரித்து வரும் நிலையில் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் மோடி அவ்வப்போது ஆலோசனை நடத்தி வருகிறார்.

கொரோனா வைரஸ் பாதிப்பை தொடர்ந்து வென்டிலேட்டர்கள் , முகக்கவசங்கள், கிருமி நாசினிகள் , மருந்து பொருட்கள் போன்றவற்றின் தேவை அதிகரித்து உள்ளது.

நாட்டில் ஊரடங்கு கடந்த சில நாட்களாக அமலசய்யப்பட்டிருக்கும் நிலையில் சுகாதார வசதிகளை மேம்படுத்துவது, பொருளாதாரத்தை மீட்டெடுப்பது, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுவதை தடுப்பது போன்றவை குறித்து யோசனைகளை தெரிவிப்பதற்காக அதிகாரமிக்க 11 உயர்மட்ட குழுக்களை கடந்த ஞயிற்றுக்கிழமை மத்திய அரசு அமைத்தது. இந்த குழுக்களானது எந்தெந்த துறைகளில் என்னென்ன பிரச்சினை உள்ளது ? அதை எப்படி சரி செய்வது ? என்பது குறித்து யோசனைகளை அரசுக்கு வழங்கும்.

இந்த உயர்மட்ட குழுவுடன் பிரதமர் மோடி நேற்று ஆலோசனை நடத்தினரர். அப்போது நாடெங்கும் கொரோனாவால் பதித்துள்ளவர்களுக்கு எந்த அளவிற்கு ஆஸ்பத்திரி வசதிகள் உள்ளன என்பது குறித்தும், நோயாளிகளை பரிசோதனை செய்யும் வசதிகள், அவர்களை தனிமைப்படுத்தும் வசதிகள் போன்றவை போதிய அளவில் உள்ளதா என்பது குறித்து மோடி கேட்டுக்கொண்டு அறிந்து கொண்டார்.

இந்நிலையில் வருகின்ற 8-ஆம் தேதி ( புதன்கிழமை) எதிர்க்கட்சி தலைவர்களுடன் ஆலோசனை செய்யப்போவதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close