fbpx
RETamil Newsதமிழ்நாடு

ஊரடங்கு காரணமாக நூல்களுக்கு சாயம் பூசும் தொழில் பாதிப்பு

Impact of dyeing industry due to curfew

பொது ஊரடங்கு காரணமாக சேலத்தில் நூல்களுக்கு சாயம் பூசும் தொழில் பெரிதும் பாதித்திருக்கிறது.

நெசவு தொழில்களுக்கு மூலப் பொருளாகக் கருதப்படும் நூல்களுக்கு வண்ணம் இடுவது பிரதான தொழிலாக சேலத்தில் கருதப்படுகிறது.

இங்கு இயந்திரங்களைக் கொண்டு சாயம் இடப்படும் பெரிய ஆலைகளும், கையினால் சாயம் இடப்படும் சிறிய பட்டறைகளும் அதிக அளவில் இயங்கி வருகின்றன.

இங்கு உற்பத்தி செய்யப்படும் ஜவுளி ரகங்கள்  , ஆண்டுதோறும் ஆர்டரின் பேரில் அனைத்து நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

கொரோனாவின் தாக்கத்தால் தற்போது விவசாயம், மீன்பிடி தொழில்கள் பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது நெசவுத் தொழிலும் இதில் சேர்ந்துள்ளது.

தற்போதுவரை இயல்புநிலை திரும்பாத சூழ்நிலையில் , சுமார் 600 கோடி ரூபாய் அளவிற்கு நூல்கள் தேக்கம் அடைந்துள்ளது எனக் கூறுகின்றனர் சேலத்தை சேர்ந்த ஆலை உரிமையாளர்கள்.

இதன் காரணமாக ,வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வது தற்போது முடங்கி இருப்பதால், இந்த தொழிலின் இயல்பு நிலை திரும்ப ஆறு மாத காலம் ஆகும் என்கின்றனர் சாய ஆலை உரிமையாளர்கள்.

 

 

 

Tags

Related Articles

Back to top button
Close
Close