சுவையான தேங்காய் பர்பி செய்வது எப்படி?
தேவையான பொருட்கள்:
தேங்காய் துருவல் 2 கப்
சர்க்கரை 1 கப்
ஏலக்காய் 3
முந்திரி 10
நெய்
தண்ணீர் 1/2 கப்
உப்பு ஒரு சிட்டிகை
தேங்காய் பர்பி செய்முறை:
முதலில் தேங்காயின் மேலிருக்கும் தோலினை சீவி விடவேண்டும். பின்னர் தேங்காயை மிக்சியில் போட்டு துருவிக் கொள்ளவேண்டும்.ஒரு வாணலியில் நெய் 2 ஸ்பூன் போட்டு அதனுடன் துருவிய தேங்காயை சேர்த்து நன்றாக கிளறிக்கொண்டே இருக்கவும். மிதமான தீயில் தேங்காயில் இருக்கும் ஈரப்பதம் போகும் வரை வறுக்க வேண்டும். தேங்காய் துருவல் சிவக்காமல் பார்த்துக் கொள்ளவும்.
சர்க்கரை பாகு:
இன்னொரு வாணலியில் 1/2 கப் தண்ணீர் இட்டு அதனுடன் 1 கப் சர்க்கரை சேர்த்து கிளறிக்கொண்டே இருக்கவும். ஒரு சிட்டிகை உப்பினை சேர்க்கவும். பாகு கையில் ஒட்டும் பதம் வந்ததும் அதனுடன் ஏலக்காய் பொடி, முந்திரி சேர்க்க வேண்டும். இறுதியாக வருத்து வைத்துள்ள தேங்காய் துருவலை இதனுடன் சேர்த்து நன்றாக கிளறி இறக்கி விடவும். பின் இதனை நெய் தடவிய தட்டில் இட்டு சதுர வடிவத்தில் வெட்டி பரிமாறலாம்.
சுவையான தேங்காய் பர்பி தயார். இனிப்பு நிறைந்த சுவையுடன் சத்து நிறைந்த சிற்றுண்டியாகவும் இது இருக்கும்.