fbpx
RETamil Newsஅரசியல்இந்தியாதமிழ்நாடு

முன்னாள் மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ஜார்ஜ் ஃபெர்னான்டஸ் காலமானார் !

முன்னாள் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் ஃபெர்னான்டஸ் இன்று காலமானார்.

1930-ஆம் ஆண்டு ஜூன் 3-ஆம் தேதி கர்நாடக மாநிலம் மங்களூருவில் பிறந்தவர் முன்னாள் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ஜார்ஜ் ஃபெர்னான்டஸ்.

கடந்த சில ஆண்டுகளாகவே உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் ஜார்ஜ் ஃபெர்னான்டஸ். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை டெல்லியில் உள்ள அவரது வீட்டில் உடல்நலக் குறைவால் காலமானார்.

ரயில்வே ஊழியராக இருந்த இவர் தொழிற்சங்கம் மூலம் பல போராட்டங்களை நடத்தியுள்ளார். எமர்ஜென்சிக்கு எதிராக நடந்த போராட்டங்களிலும் பங்கேற்று, அதன் பின்னர் நேரடி அரசியலில் குதித்தார்.

ஐக்கிய ஜனதா தளம் கட்சியில் இணைந்து முதன் முறையாக 1977-ம் ஆண்டில் எம்.பியாக தேர்வானார். பின்னர், 1989 முதல் 1990 வரை நடந்த ஐக்கிய ஜனதா ஆட்சியில் ரயில்வே அமைச்சாராக பெர்னாண்டஸ் பணியாற்றியுள்ளார்.

வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, பாதுகாப்புத்துறை அமைச்சராக பதவி வகித்தவர் ஜார்ஜ் ஃபெர்னான்டஸ். 1998 முதல் 2004 வரையிலான காலத்தில் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த தலைவர்களில் ஒருவராக அசைக்க முடியாத சக்தியாக விளங்கினார்.

வி.பி. சிங் அமைச்சரவையில் ரயில்வே அமைச்சராகவும் இருந்துள்ளார் ஜார்ஜ் ஃபெர்னான்டஸ். அதை தவிர தவிர்த்து தகவல் தொழில்நுட்பம், தொழில்துறை அமைச்சராகவும் ஜார்ஜ் பொறுப்பு வகித்திருக்கிறார். கார்கில் போர் நடந்தபோது இவர் பாதுகாப்பு துறை அமைச்சராக இருந்தார் என்பது குறிப்பிடத்தகுந்தது.

2010-க்குப் பிறகு அரசியலில் இருந்து ஒய்வு பெற்ற அவர் டெல்லியில் வசித்து வந்தார். அல்சைமர் நோயால் அவதிப்பட்டு வந்த ஜார்ஜ் ஃபெர்னான்டஸ் தனது 88 வயதில் இன்று காலமானார். அவரது மறைவுக்கு பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

Related Articles

Back to top button
Close
Close