என்ன கொடும சாமி இது? ஏழையா பொறந்தாலும் தப்பில்லை; சாதி தெரியாம செத்தா தப்பா?
ஒடிசா மாநிலத்தில், உள்ள ஜர்சுகுதா என்ற இடத்தில் மூதாட்டி தன் சகோதரருடன் சாலையோரமாக பிச்சை எடுத்து வாழ்ந்து கொண்டு வந்தார்.
இதை அடுத்து சென்ற புதன் கிழமை அந்த மூதாட்டி இறந்து விட்டார். அந்த மூதாட்டி எந்த சாதி என்று தெரியாததால் அவளின் உடலை தொட்டு தூக்கி தகனம் செய்ய எந்த ஒரு மக்களும் முன் வரவில்லை .
ஆனால் இதை அறிந்த ஒடிசா மாநிலத்தின் ஒரு எம்.எல்.ஏ ரமேஷ் பட்டுவா அந்த மூதாட்டியின் உடல் தகனம் செய்ய முன் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.அம்மாநில எம்.எல்.ஏ-க்களில் அவர்தான் மிகவும் வசதியற்றவர் .
அம்மூதாட்டி இறந்த இடத்தில் உள்ள மக்கள் எந்த சாதி என்று தெரிந்தால் தான் தொடுவார்கள்.
எந்த சாதி என்று தெரியாமல் இறந்த உடலை தொடமாட்டார்கள் என்பதால் அந்த இடத்திற்கு எம்.எல்.ஏ ரமேஷ் பட்டுவா தன் இரு மகன் மற்றும் உறவினருடன் சென்று அந்த மூதாட்டிக்கு செய்ய வேண்டிய இறுதி சடங்கினை செய்து முடித்தார்.
இந்த மனிதாபிமான செயலால் அந்த எம்.எல்.ஏ-வுக்கு பாராட்டுகள் குவிந்தவண்ணம் உள்ளது.