fbpx
Others

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்–மாட்டிறைச்சியை கமலாலயத்தில்தயார் செய்யுங்கள்…

Prepare beef EVKS Elangovan response to Annamalai தமிழர்களை அவமதிக்கும் வகையில் பிரதமர் மோடி கருத்து தெரிவித்ததாக காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இதனிடையே தமிழர்களிடம்பிரதமர் மோடி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்காவிட்டால் சென்னையில் உள்ளபா.ஜனதாதலைமை அலுவலகமான கமலாலயத்தின் முன்பு காங்கிரஸ் கட்சி சார்பில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்படும் என அக்கட்சியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை
அறிவித்தார்.இதற்கு பதிலளிக்கும் வகையில் பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை தனது ‘எக்ஸ்’ வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “பா.ஜனதா அலுவலகத்திற்கு வரவிருக்கும் தேதியைமுன்கூட்டியேஅறிவித்தால்,வரும்பத்துபேருக்கும்உணவுஏற்பாடுசெய்யவசதியாக   இருக்கும்.மேலும்,வரும்அனைவருக்கும்தி.மு.க.மற்றும்காங்கிரஸ்கட்சிதமிழர்களுக்கு செய்த துரோகங்கள் குறித்த புத்தகமும் பரிசாக வழங்கலாம் என்று இருக்கிறோம்” என்று பதிவிட்டார்.
இந்நிலையில், கமலாலயத்தில் மாட்டிறைச்சி உள்ளிட்ட அசைவ உணவுகளை தயார் செய்து வைக்குமாறு அண்ணாமலைக்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்பதிலடி கொடுத்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எங்களுக்கு அசைவ உணவுகள் பிடிக்கும். கமலாலயத்தில் மாட்டிறைச்சியை தயார் செய்து வையுங்கள். நாங்கள் வருவதற்கு 2 நாட்களுக்கு முன்பு அறிவிக்கிறோம். அண்ணாமலை அதற்குள் தயார் செய்து கொள்ளட்டும்” என்று தெரிவித்தார்.


Related Articles

Back to top button
Close
Close