fbpx
GeneralRETamil NewsTrending Nowஉலகம்

மறுபடியும் கொரோனா பிடியில் நியூசிலாந்து…! 2 பேருக்கு பாதிப்பு!

Corona cases identified in Newzealand again

வெலிங்டன்:

கொரோனா இல்லாத நாடாக அறிவிக்கப்பட்ட நியூஸிலாந்து மீண்டும் கொரோனா பிடியில் சிக்கி இருக்கிறது.

200க்கும் அதிகமாக நாடுகளில் கொரோனா வெகு வேகமாக பரவி வருகிறது. குறைந்த மக்கள் தொகை கொண்ட நியூசிலாந்து கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளது.

16 லட்சம் மக்கள் வாழும் நியூஸிலாந்தில் கொரோனாவால் 1,156 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 22 பேர் பலியாகி உள்ளனர்.

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு சிகிச்சைகள் அளிக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு கொரோனாவின் தாக்கம் குறைந்தது.

இதையடுத்து கொரோனா இல்லாத நாடாக நியூசிலாந்து அறிவிக்கப்பட்டது. இதை அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் அறிவித்து பொதுமக்கள் சுதந்திரமாக நடமாட அனுமதித்தார். 25 நாட்களாக அங்கு புதிய தொற்றுகள் இல்லாமல் இருந்தது.

இந் நிலையில் இன்று நியூசிலாந்தில் புதியதாக இரு தொற்றுகள் பதிவாகியுள்ளன. அவர்கள் இருவரும் பிரிட்டனுக்கு சென்று வந்தவர்கள். இருவரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

Tags

Related Articles

Back to top button
Close
Close