fbpx
GeneralRETamil NewsTrending Nowஉலகம்

50 லட்சம்…! உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை

Corona affected crosses 50 lakhs worldwide

ஜெனீவா:

உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 50 லட்சத்தை கடந்து அதிர்ச்சியை  தந்திருக்கிறது.

சீனாவின் உகான் நகரில் கடந்த டிசம்பர் மாதம்  கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளில் கோர தண்டவம் ஆடுகிறது.  அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

ஆசிய நாடுகளும் கடும் இழப்பை சந்தித்து வருகின்றன. உலகம் முழுவதும் 200 நாடுகளில் பரவி உள்ள கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை உலக நாடுகள் முன் எடுத்து வருகின்றன.

ஆனாலும்  அமெரிக்கா, ரஷ்யா போன்ற வல்லரசு நாடுகளில்  கொரோனா இன்னும் கட்டுக்குள் வரவில்லை. இந்தியாவிலும்  கொரோனா பாதிப்பு நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

இந் நிலையில், உலகளவில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 50 லட்சத்தை தாண்டிவிட்டது.  கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை  1,970,918 ஆக உள்ளது. பலியானவர்களின் எண்ணிக்கை  325,151 ஆக இருக்கிறது.

Tags

Related Articles

Back to top button
Close
Close