fbpx
RETamil Newsதமிழ்நாடு

தலப்பாகட்டி பிரியாணி கடை பெயரைப் பயன்படுத்த தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

பிரபலமான தலப்பாகட்டி என்ற பெயரையோ அல்லது அதன் வணிக குறியீட்டையோ பயன்படுத்த 7 பிரியாணிக் கடைகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி உணவகம் தமிழகத்தில் மிகவும் பிரபலமானது. இதே பெயரில் பல இடங்களில் உணவகங்கள் இருப்பது மக்களை குழப்பத்தில் ஆழ்த்தி வந்தது. இந்நிலையில் திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி உணவகம் சார்பில் அதன் பங்குதாரர் நாகசாமி தாக்கல் செய்த மனுவில், மக்கள் மத்தியில் புகழ்பெற்ற தங்கள் நிறுவனத்தின் தலப்பாக்கட்டி, தலப்பாகட்டு போன்ற பெயர்களையும், வணிக சின்னத்தையும் பயன்படுத்த ஏழு தனியார் உணவகங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், தலப்பாக்கட்டி பெயரை பயன்படுத்த கோடம்பாக்கம் தலப்பாக்கட்டு பிரியாணி உள்ளிட்ட ஏழு உணவகங்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், மனுவுக்கு ஜூன் 14-ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி இந்த உணவகங்களுக்கு உத்தரவிட்டார்.

Related Articles

Back to top button
Close
Close