fbpx
GeneralRETamil NewsTrending Nowஇந்தியா

மேற்கு வங்க மாநிலத்தில் பேருந்து சேவை…! மக்கள் மகிழ்ச்சி!

Bus service resumes in West Bengal

கொல்கத்தா:

மேற்கு வங்க மாநிலத்தில் பேருந்து சேவை முழு அளவில் அனுமதிக்கப்பட்டிருப்பது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் மார்ச் 25ம் தேதி  முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து, நாடு முழுவதும் பொது போக்குவரத்து சேவைகளும் முடக்கப்பட்டன.  தற்போது, கொரோனா ஊரடங்கில் இருந்து படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இந்  நிலையில்,  மேற்கு வங்கத்தில் கொல்கத்தா மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பேருந்து சேவை தொடங்கப்பட்டது. அரசு பேருந்துகளுக்கு மட்டுமின்றி, தனியார் பேருந்து சேவைக்கும் மாநில அரசு அனுமதி அளித்தது.

ஆனால், 25 சதவீத தனியார் பேருந்துகள் மட்டுமே சேவையைத் தொடங்கின. கட்டண உயா்வு கோரிக்கையை முன்வைத்து பேருந்து சேவையை முழுமையாக தொடங்க தனியார் பேருந்து நிர்வாகிகள் மறுப்பு தெரிவித்தனா்.

ஆனால்,  தனியார் பேருந்துகள் இயங்க மூன்று நாட்கள் கெடுவை மம்தா பானர்ஜி விதித்து இருந்தார்.  இதைத்தொடர்ந்து,  தனியார் பேருந்துகளும் முழு அளவில் சேவையை தொடங்கின.

Tags

Related Articles

Back to top button
Close
Close