fbpx
RETamil Newsஅரசியல்இந்தியாதமிழ்நாடு

புதிய கல்விக்கொள்கை குறித்து மக்கள் கருத்துக்களை கேட்டறிந்த பின்பே அமல்படுத்தப்படும்- நிர்மலா சீதாராமன்!

புதிய கல்விக் கொள்கையை வரையறுப்பதற்காக கஸ்தூரி ரங்கன் தலைமையிலான கல்விக்குழுவை மத்திய அரசு நியமித்திருந்தது. புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு அறிக்கையை அந்த குழு மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளது. இந்த வரைவு அறிக்கையில், நாடு முழுவதும் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தி, இந்தி பேசாத மாநிலங்களிலும் இந்தியை கட்டாயப் பாடமாக்குமாறு பரிந்துரைத்துள்ளது.

மேலும் மூன்றாவது மொழித்தேர்வு என்பது மாநிலங்களின் அடிப்படையில் இருக்க வேண்டும் என்றும், மாநிலத்தின் தாய்மொழியைப் பொறுத்து மூன்றாவது மொழி அமைய வேண்டும் என்றும் வரைவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன. ஆசிரியர்கள், கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்கள் இந்த வரைவு அறிக்கை குறித்த கருத்தை மத்திய அரசிடம் தெரிவிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த மும்மொழிக் கொள்கைக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து, இந்தி பேசாத மாநிலங்களிலும் இந்தியை கட்டாயப் பாடமாக்குமாறு பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது. இந்தி திணிப்புக்கு எதிராக பல்வேறு அரசியல் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது ட்விட்டர் பதிவில், மக்கள் கருத்துக்களை கேட்டறிந்த பின்பே கல்வி குழுவின் வரைவு அறிக்கை அமல்படுத்தப்படும்.

பிரதமர் அனைத்து இந்திய மொழிகளையும் வளர்க்க விரும்பியே ஒரே பாரதம் உன்னத பாரதம் முயற்சியை துவக்கினார். தொன்மையான தமிழ் மொழியை போற்றி வளர்ப்பதற்கு மத்திய அரசு முன்னின்று ஆதரிக்கும் என்று பதிவிட்டுள்ளார்.

இதேபோல், எந்த மொழியையும் திணிக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close