மார்ச் மாதத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு…?
தமிழக சட்டமன்றத்தின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில் மார்ச் மாதத்தில் தேர்தல் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.. இதனை முன்னிட்டு தேர்தல் ஆணையம் தனது பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ள சூழலில் இந்த ஆய்வு பயணம் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.பொதுவாக தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களுக்குத் தேர்தல் ஆணையக் குழு நேரில் சென்று ஆய்வு செய்வது வழக்கமான நடைமுறையாகும்.. இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தலைமையில் தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி உள்ளிட்ட 7 அதிகாரிகள் அடங்கிய குழுவினர் இன்று மதியம் சென்னை வந்தடைகின்றனர்.. ஸ்டார் ஓட்டல் சென்னை வந்திறங்கும் அவர்கள் உடனடியாகத் தனி விமானம் மூலம் புதுச்சேரிக்கு செல்கின்றனர்.. அங்கு சட்டமன்றத் தேர்தலுக்கான நிர்வாக ரீதியான ஏற்பாடுகள், வாக்குச்சாவடிகளில் செய்யப்பட்டுள்ள வசதிகள் மற்றும் பாதுகாப்புத் திட்டங்கள் குறித்து விரிவான ஆய்வுகளை மேற்கொள்கின்றனர்.. புதுச்சேரியில் அதிகாரிகளுடன் ஆலோசனைகளை முடித்துவிட்டு இரவு அங்கேயே தங்கும் இக்குழுவினர், நாளை காலை மீண்டும் சென்னைக்குத் திரும்புகின்றனர்..சென்னையில் ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் உள்ள ஸ்டார் ஓட்டலில் தங்கும் தேர்தல் ஆணைய குழுவினர் பல்வேறு தரப்பினருடன் தொடர்ஆலோசனைகளைநடத்தத்திட்டமிட்டுள்ளனர்..முதற்கட்டமாக தமிழக தலைமை செயலர், மாநில காவல்துறைத் தலைவர், மாவட்ட தேர்தல் அதிகாரிகள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுடன் சட்டம்-ஒழுங்கு நிலைமை மற்றும் வாக்குச்சாவடி பாதுகாப்பு குறித்து விவாதிக்க உள்ளனர்.. இதனை தொடர்ந்து வருமான வரித்துறை,
சுங்கத்துறை மற்றும் அமலாக்கத்துறை போன்ற மத்திய அமைப்புகளின் அதிகாரிகளுடன் பணப்பரிவர்த்தனை கண்காணிப்புமற்றும்தேர்தல்நடத்தைவிதிமுறைகளைஅமல்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.. தேர்தல் ஆணையத்தின் இந்த ஆய்வில் அரசியல் கட்சிகளின் பங்களிப்பும் உறுதி செய்யப்பட்டுள்ளது.. அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளைச் சந்தித்து அவர்களின் கருத்துகளையும் கோரிக்கைகளையும்இக்குழுவினர்கேட்டறிகின்றனர்.. இந்தபரிந்துரைகளைஆய்வுசெய்தபிறகுதமிழகதலைமைத்தேர்தல்அதிகாரிஅர்ச்சனாவுக்குதேவையானமுக்கியவழிகாட்டுதல்களை தேர்தல் ஆணையம் வழங்க உள்ளது.. கடந்த வாரம்துணைஆணையர்கள்ஆய்வுசெய்தநிலையில்,தற்போதுதலைமைஆணையரின்வருகைதேர்தல்பணிகளைஅடுத்தகட்டத்திற்குஎடுத்துசென்றுள்ளது..இக்குழுவினர்தங்களதுபணிகளைமுடித்துக்கொண்டு வரும் 27ம் தேதி மாலை டெல்லி திரும்புகின்றனர்..இதற்கிடையில் தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.. சிறப்புத் தீவிர திருத்தப் பணிகளுக்குப்பிறகுவெளியிடப்பட்டுள்ளஇந்தப்பட்டியலில்வாக்காளர்களின்எண்ணிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.. திருத்த பணிகளுக்கு முன்பாக 6 கோடியே 41 லட்சத்து 14 ஆயிரத்து 587 ஆக இருந்த வாக்காளர்களின் எண்ணிக்கை, இப்போது இறுதி பட்டியலில் 5 கோடியே 67 லட்சத்து 7 ஆயிரத்து 380 ஆகக் குறைந்துள்ளது.. வாக்காளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டுத் தேர்தல் ஆணையக் குழுவின் நேரடி ஆய்வும் தொடங்குவதால் தமிழகத்தில் தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது..