காங்கிரஸ் கட்சியை திமுக அழைக்கவில்லை என குறிப்பிடத்தக்கது……
சட்டமன்ற தேர்தல் நெருங்க நெருங்க திடீர் திடீரென அரசியல் மாற்றங்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த 20 வருடங்களாக 2014ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை தவிர்த்து அனைத்து தேர்தல்களிலும் திமுக – காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட்டு வருகிறது. இந்த கூட்டணி வெற்றி கூட்டணியாகவே உள்ளது. இதற்கு ஏற்ப 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 39 தொகுதியையும், 2021ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 173 இடங்களையும், 2024ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு 40 தொகுதிகளை கைப்பற்றியது.எனவே 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் இந்த கூட்டணி தொடரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திமுக தலைமைக்கு ஷாக் கொடுத்தது காங்கிரஸ் கட்சி, அந்த வகையில் திமுக கூட்டணியில் இருந்து விலகி நடிகர் விஜய்யின் தவெகவுடன் இணைய திட்டமிட்டது. இதற்காக காங்கிரஸ் நிர்வாகிகளும் தனிப்பட்ட முறையில் விஜய்யை சந்தித்து பேசினார். மேலும்காங்கிரஸ்நிர்வாகிகள்வெளிப்படையாகவே கூட்டணி ஆட்சி, காங்கிரஸ் கட்சிக்கு கடந்த முறை ஒதுக்கப்பட்டதை விட கூடுதல்தொகுதிகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என திமுகவை நிர்பந்தம் செய்ததுஇதனால் அதிருப்தி அடைந்த திமுக, கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த குழுவை அறிவிக்காமல் இழுத்தடித்து வருகிறது. கடந்த நவம்பர் மாதம் காங்கிரஸ் சார்பாக அமைக்கப்பட்ட தொகுதி பங்கீட்டு குழு திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து பேசியது. இதனையடுத்து பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சுமார் 2 மாதங்களை கடந்தும் இன்னும் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் உள்ளது. எனவே திமுக- காங்கிரஸ் கூட்டணி முறியுமா.? என பேச்சு எழுந்த நிலையில், ஓரிருநாட்களில் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தைக்கு குழு அமைக்கப்படவுள்ளதாக திமுக தரப்பு தெரிவித்ததுஇந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத வகையில் திடீர் திருப்பமாக புதுச்சேரியில் திமுக நடத்திய தேர்தல் தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் காங்கிரஸ் கட்சிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. புதுச்சேரி மாநிலத்தில் 6 சட்டமன்ற உறுப்பினர்களுடன் திமுக சட்டமன்ற எதிர்க்கட்சியாக செயல்படுகிறது.காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு சட்டமன்ற உறுப்பினர்களே உள்ளனர். இந்த நிலையில் இன்றைய கூட்டத்தில் புதுச்சேரி பொறுப்பாளரும் திமுக எம்பியுமான ஜெகத்ரட்சகன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் புதுச்சேரி மாநில செயலாளர் அரிமா தமிழன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சலீம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ராமச்சந்திரன் உள்ளிட்டோருடன் பேச்சுவார்த்தைநடத்தினார். கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜெகத்ரட்சகன், புதுச்சேரி தேர்தல் பொறுப்பாளர் என்ற முறையில் என்னை விடுதலை சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளுடன் அறிமுகம் செய்து கொண்டேன். அவர்களது வீட்டிற்கு வருவதாக நான் தெரிவித்தேன். ஆனால் அவர்கள் தான் என்னை வந்து சந்திப்பதாக கூறினார்கள். இந்த கூட்டத்தில் கூட்டணி தொடர்பாக எதுவும் பேசவில்லை. தொகுதி பங்கீடு மற்றும் கூட்டணி தொடர்பாக கட்சி மேலிடம் முடிவு அறிவிக்கும் என தெரிவித்தார். அதேநேரம் முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமியிடம் திமுக கூட்டம் தொடர்பான கேள்விக்கு, இந்த கூட்டம் குறித்து தமக்கு தெரியாது என்றும் காங்கிரஸ் கட்சியை திமுக அழைக்கவில்லை என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.