வால்பாறை சுற்றுலா வளர்ச்சியில் அடிப்படை வசதிகள் இல்லாத அவலம்..? WHY…?
வால்பாறை சுற்றுலா வளர்ச்சியில் அடிப்படை வசதிகள் இல்லாத அவலம்பூட்டியே கிடக்கும் கழிவறைகள் – சுற்றுலா பயணிகள் கடும் வேதனை
கோவை மாவட்டம், வால்பாறை:—மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் இயற்கை அழகுடன் விளங்கும் வால்பாறை, தமிழகத்தின் முக்கிய சுற்றுலாதலங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. ஆண்டுதோறும் தமிழகத்திலும்கேரளாவிலும்இருந்துஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வால்பாறையை நோக்கி வந்து செல்கின்றனர். இருப்பினும், இவ்வளவு பெரிய சுற்றுலா வளர்ச்சிபெற்றுள்ளபோதிலும்,சுற்றுலாபயணிகளுக்கான அடிப்படை தேவைகளில் ஒன்றான கழிவறை வசதி இல்லாதது மிகப்பெரிய அவல நிலையாக உருவெடுத்துள்ளது.வால்பாறையை அடுத்துள்ள சோலையார் அணை பகுதி, கேரளா எல்லையை ஒட்டிய அமைந்துள்ள முக்கிய சுற்றுலா இடமாக வேகமாக வளர்ந்து வருகிறது. குறிப்பாக வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் கேரளாவில் இருந்து அதிக அளவில் சுற்றுலா பயணிகள் இந்த பகுதிக்கு வருகை தருகின்றனர். அதிரம்பள்ளி நீர்வீழ்ச்சியை பார்வையிட்டு திரும்பும் சுற்றுலா பயணிகள், சுமார் 50 கிலோ மீட்டர் பயணம் செய்து,இரண்டுமணிநேரத்திற்கும்மேலாகசோலையார்அணைபகுதியைஅடைந்து,அங்குவாகனங்களைநிறுத்திதேநீர்,காபிபோன்றவற்றைஅருந்திஓய்வெடுக்கின்றனர்.இந்நிலையில், சோலையார் அணை பகுதியில் அடிப்படை கழிவறை வசதி இல்லாதது சுற்றுலா பயணிகளை பெரும் மன வேதனைக்கு உள்ளாக்கி வருகிறது. குறிப்பாக பெண்கள் மற்றும் முதியவர்கள்
அவசர தேவைக்காக இடம் தேடி அங்கும் இங்கும் ஓட வேண்டியசூழ்நிலைஉருவாகிஇருப்பதுசமூகஅக்கறையைகேள்விக்குறியாக்குகிறது.மேலும், சோலையார் அணை பகுதி, சேடல் டாம் பகுதி, பெரியார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன்னரே கழிவறைகள் கட்டப்பட்டு இருந்தாலும், அவற்றிற்கு தண்ணீர் வசதி ஏற்படுத்தப்படாததால், இன்றளவும் பூட்டியே கிடப்பது தான் மிகுந்த வேதனைக்கும், வேடிக்கைக்கும் உரிய விஷயமாக உள்ளது. இதற்காக வால்பாறை நகராட்சி இதுவரை எந்தவிதமானநடவடிக்கையும் எடுக்காதது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.வால்பாறை நகராட்சிக்கு அதிக வருமானம் ஈட்டி தரும் சுற்றுலா பயணிகளுக்கே இவ்வாறு அடிப்படை வசதி மறுக்கப்படுவது நியாயமற்றது என சுற்றுலா பயணிகள் குற்றம்சாட்டுகின்றனர். ஆகையால், வால்பாறை நகர மன்ற தலைவர் உடனடியாக இந்த விவகாரத்தில் தலையிட்டு, பூட்டியே கிடக்கும் கழிவறைகளை சீரமைத்து, தண்ணீர் வசதி ஏற்படுத்தி, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர் கோவை மாட்ட புகைபட கலைஞர் ஜெயப்பிரகாஷ். தே