செங்குன்றம்–மாற்றுத்திறனாளிகளுக்கு கண் பரிசோதனை முகாம்..

செங்குன்றம் காமராஜர் இலவச கண் மருத்துவமனை சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு கண் பரிசோதனை முகாம் நடந்தது! மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு செங்குன்றம் வட்டார நாடார் இளைஞர் அணியின் காமராஜர் இலவச கண் மருத்துவமனை சார்பில் 20க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு கண் பரிசோதனை நடைபெற்றது.செங்குன்றம் வட்டார நாடார் இளைஞர் அணி சங்கத் தலைவர் ஜெ.பால்ராஜ், செயலாளர் பி.ராஜேஷ், பொருளாளர் எஸ்.சுந்தரமூர்த்தி ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டுகண்பரிசோதனை முகாமை துவக்கி வைத்தனர்.கண்மருத்துவர்.பா.விஜயந்திதலைமயில்பார்வைமருத்துவர்கள். ரூபி, சங்கீதா, செவிலியர்கள் சுமதி, தருணிகா ஆகியோர் மாற்றுத் திறனாளிகளுக்கு கண் பரிசோதனை, பார்வைக் குறைபாடு, கண் நோய் உள்ளிட்ட பல்வேறு பரிசோதனைகள் மேற்கொண்டு தகுந்த ஆலோசனைகளைவழங்கினர்.சமூக சேவகர்தாமோதரன் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் மனதின் குரல் அறக்கட்டளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் திரளாக கலந்துகொண்டனர்.