fbpx
Others

*இராணிப்பேட்டை மாவட்ட காவல்துறை*தேதி: 09.09.2025—சிறப்பு செய்தி

❇️“ *தமிழ்நாடு முதலமைச்சரின் சிறந்த காவல் நிலையத்திற்கான விருது” பெற்ற வாலாஜாபேட்டை காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் வாழ்த்து* ❇️தமிழ்நாடு அரசு, மாவட்ட / மாநகர அளவிலான சிறந்த காவல் நிலையங்களை ஒவ்வொரு ஆண்டும் தேர்வு செய்து “தமிழ்நாடு முதலமைச்சரின் சிறந்த காவல் நிலையத்திற்கான பரிசு” வழங்கிவருகிறது. .❇️அதன்படி, கடந்த 2023 ஆம் ஆண்டிற்கான சிறந்த காவல் நிலையமாக இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள *வாலாஜாபேட்டை காவல் நிலையம்* தேர்வு செய்யப்பட்டது. இதற்கான விருதை, காவல் நிலையம் சார்பாக *ஆற்காடு கிராமிய காவல் ஆய்வாளர் திரு. சாலமோன் ராஜா* அவர்கள், கடந்த 06.09.2025 அன்று சென்னை காவல்துறை தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் *காவல்துறை தலைமை இயக்குநர்* அவர்களிடம் இருந்து பெற்றார்.❇️மேற்கண்ட விருது பெற்ற ஆற்காடு கிராமிய வட்ட ஆய்வாளர் திரு. சாலமோன் ராஜா அவர்களை, இன்று (08.09.2025) மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் *திருமதி. அய்மன் ஜமால், இ.கா.ப.,*அவர்கள்பாராட்டி,எப்போதும்சிறந்துவிளங்கவேண்டும்எனவாழ்த்தினார்.  ❇️இந்நிகழ்ச்சியில், இராணிப்பேட்டை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் *திரு. இமயவர்மன்* அவர்கள் உடனிருந்தார்.

Related Articles

Back to top button
Close
Close