தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி—சிறப்புசெய்தி..

தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி சார்பில் போடிநாயக்கனூர் அரசு தலைமை மருத்துவமனையில் காச நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இணை உணவு வழங்கும் நிகழ்வு இன்று(22.02.2025) சிறப்பாக நடைபெற்றது.தேனி மாவட்ட இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டியின் துணை சேர்மன் திரு.வி.மகாராஜன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மருத்துவமனையின் தலைமை மருத்துவ அலுவலர் மரு.ரவீந்திரநாத் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.மாவட்ட செயலாளர் திரு.க.சுருளிவேல், பொருளாளர் திரு.எஸ். முகமது ஷேக் இப்ராஹிம் நிர்வாகக்குழு உறுப்பினர் திருமதி.அம்பாள் திரு. எஸ்.முருகேசன், திருமதி.பிரீத்தா நிகழ்வின் நன்கொடையாளர்கள் திரு.ஆனந்த் குமார், ரம்யா, ஜோதி செல்வம், மாரிமுத்து, கணேசன், சுகாதார கல்வியாளர் வேல்முருகன், காசநோய் ஆலோசகர் பாண்டியன் மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.காச நோயால் பாதிக்கப்பட்ட வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள 13 நோயாளர்களுக்கு இணை உணவு பெட்டகங்கள் சிறப்பு விருந்தினர்களால் வழங்கப்பட்டது.இவர்களுக்கு தொடர்ந்து ஆறு மாதங்கள் இணை உணவு நன்கொடையாளர்கள் சார்பில் வழங்கப்படும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். வேல்முருகன் ஆண்டிப்பட்டி செய்தியாளர்
