சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து — 6 பேர் உயிரிழப்பு.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பொம்மையாபுரம் கிராமத்தில் சாய்நாத் பட்டாசு ஆலையில் இன்று (ஜன.4) காலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 அறைகள் தரைமட்டமானதில் 6 பேர் உயிரிழந்தனர்.விருதுநகர் அருகே வச்சக்காரப்பட்டி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பொம்மையாபுரம் கிராமத்தில் பாலாஜி என்பவர் சாய்நாத் ஃபயர் ஒர்க்ஸ் என்ற பெயரில்
பட்டாசு ஆலை நடத்தி வருகிறார்.நாக்பூரில் உள்ள மத்திய வெடிபொருள் கட்டுப்பாட்டு துறை உரிமம் (பெசோ) பெற்ற இந்தஆலையில்உள்ள35அறைகளில்80கும்மேற்பட்டதொழிலாளர்கள்பேன்சிரகபட்டாசுகள்உற்பத்திசெய்யும்பணியில்ஈடுபட்டுவருகின்றனர்.இந்நிலையில், இன்று காலையில் பட்டாசு உற்பத்திக்கான வேதிப் பொருட்களை கலவை செய்யும் போது, காலை 9.40 மணி அளவில் உராய்வு காரணமாக திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த வெடி விபத்தில் 4 அறைகள் தரைமட்டமாயின. அந்த அறைகளில் இருந்த 6 தொழிலாளர்கள்சம்பவஇடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். சிவகாசி, சாத்தூர் தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.