Others
தங்கைகளுக்கு விஜய் அண்ணனின் கடிதம்…
அண்ணா பல்கலை., மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை தொடர்ந்து பெண்களுக்கு ஆதரவாக தன் கைப்பட கடிதம் ஒன்றை விஜய் எழுதியிருக்கிறார். அதில், “யாரிடம் நாம் பாதுகாப்பு கேட்பது? ஆட்சியாளர்களை கேட்டு பயனில்லை. எல்லா சூழலிலும் நான் உங்களுடன் நிற்பேன். பாதுகாப்பான தமிழகத்தை படைத்தே தீருவோம். இதை நாம் இணைந்தே சாத்தியப்படுத்துவோம்” என்று உருக்கமாக குறிப்பிட்டிருக்கிறார்.தமிழக பெண்களுக்கு “அன்புத் தங்கைகளே” என்று குறிப்பிட்டு உருக்கமான கடிதத்தை எழுதியிருக்கிறார் தவெக தலைவர் விஜய். அதில், “அண்ணனாகவும், அரணாகவும்நான்உங்களுடன்உறுதியாகநிற்கிறேன்”என்றுகுறிப்பிட்டுள்ளார். தாய்மார்கள், பெண் குழந்தைகள், தங்கைகள்எனஅனைவரும்தினந்தோறும்பலகொடுமைகளை அனுபவிப்பதாகவும் ஆட்சியாளர்கள் அதனை கண்டுகொள்வதில்லை என்றும் கடிதத்தில் குற்றம்சாட்டியிருக்கிறார்.