fbpx
Others

ஈரோடு–கஞ்சா செடி வளர்த்து வந்த பிரபு சாமி கைது..

 

ஈரோடு மாவட்டம், கடம்பூர் அருகேயுள்ள மாக்கம்பாளையம், கோம்பையூர் பகுதியில் வசித்து வருபவர் ஒன்னழகன் இவரது மகன் பிரபு சாமி (31) இவருக்கு சொந்தமான மக்காச்சோள காட்டில் கஞ்சா செடி இருப்பதாக, நேற்று முன்தினம் மாலை போலீசாருக்கு ரகசியம் தகவல் கிடைத்தது. ரகசிய தகவலின் பேரில் கடம்பூர் போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர்.சோதனையில் மக்காச்சோள காட்டில் 3 அடி உயரமுள்ள 4 கஞ்சா செடிகளை சட்ட விரோதமாக பிரபு சாமி வளர்த்து வந்தது தெரியவந்தது.இதனையடுத்து 4 கஞ்சா செடிகளையும்கைப்பற்றிய கடம்பூர் போலீசார் பிரபு சாமி மீது வழக்கு பதிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தனர்..

Related Articles

Back to top button
Close
Close