fbpx
Others

தேனி உத்தமபாளையம் — பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு..

தேனி உத்தமபாளையம் பிடி ஆர் மற்றும் தந்தை பெரியார் கால்வாயில் பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு   தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகாவில் பிடி ஆர் கால்வாய் மற்றும் தந்தை பெரியார் கால்வாயில் இருந்து பாசனத்திற்கு தண்ணீரை தேனி மாவட்ட ஆட்சியர் ஆர் வி ஷஜீவனா  மற்றும் தேனிநாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் கம்பம் சட்டமன்ற உறுப்பினர் ராமகிருஷ்ணன் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணக்குமார் ஆகியோர் தண்ணீரை திறந்து வைத்தனர் அதன்படி 120 நாட்களுக்கு வினாடிக்கு 100 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளன . இந்த தண்ணீர் திறப்பால் உத்தமபாளையம் வட்டத்தில் 830 ஏக்கரும் தேனி வட்டத்தில் 4316 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெறுகின்றன. மேலும் பிடி ஆர் மற்றும் தந்தை பெரியார் கால்வாய் விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன் படுத்த வேண்டும் என நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டும் என பொதுப் பணித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் இந்த நிகழ்வில் சின்னமனூர் திமுக ஒன்றிய செயலாளர் அண்ணாத்துரை உத்தமபாளையம் உதவி செயற்பொறியாளர் மயில்வாகனன், உதவி பொறியாளர்கள் பிரவீன், கதிரேசன் இருந்தனர்..

Related Articles

Back to top button
Close
Close