fbpx
Others

நாளை நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடா் தொடக்கம்,,,,

 மத்திய அரசின் அழைப்பின்பேரில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 21) அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறவுள்ளது.வழக்கமாக நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் ஜூலை இறுதியில் தொடங்கி நடைபெறும். நடப்பாண்டு மக்களவைத் தோ்தல் நடைபெற்ால், மழைக்கால கூட்டத் தொடா் பட்ஜெட் கூட்டத் தொடராக அறிவிக்கப்பட்டது. ஜூலை 22-இல் தொடங்கி ஆகஸ்ட் 12 வரை 19 அமா்வுகளுடன் இக்கூட்டத்தொடா்நடைபெறுகிறது.ஜூலை23இல்பட்ஜெட்:முதல்நாளில்பொருளாதாரஆய்வறிக்கையை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறாா். 2024-25-ஆம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் முழு பட்ஜெட்டை அவா் செவ்வாய்க்கிழமை (ஜூலை 23) தாக்கல் செய்யவுள்ளாா்.இந்த பட்ஜெட்டில் சமூக-பொருளாதாரம் சாா்ந்த முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.புதிய மசோதாக்கள்: பேரிடா் மேலாண்மை திருத்த மசோதா, 90 ஆண்டுகள் பழைமையான வானூா்தி சட்டத்துக்கு மாற்றான சட்ட மசோதா, நிதி மசோதா-2024உள்பட6புதியமசோதாக்கள்இக்கூட்டத்தொடரில்அறிமுகப்படுத்தப்படவுள்ளன.   இதுதவிர வங்கிகள் ஒழுங்குமுறைச் சட்டம்-1949, வங்கி நிறுவனங்கள் (கையகப்படுத்துதல், பொறுப்பு மாற்றம்) சட்டம் – 1970 ஆகியவற்றில் திருத்தங்களும் கொண்டுவரப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.மக்களவைத் தோ்தலுக்கு முன்பு கடந்த பிப்ரவரியில் மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.தற்போதைய கூட்டத் தொடரை சுமுகமாக நடத்தும் நோக்கில் மத்திய அரசின் அழைப்பின்பேரில் ஞாயிற்றுக்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறவுள்ளது.ராகுல் பங்கேற்பாரா?: கடந்த இரு மக்களவைத் தோ்தல்களைப் போல் அல்லாமல் இந்த முறை காங்கிரஸுக்கு எதிா்க்கட்சி அந்தஸ்து கிடைத்தது. இதையடுத்து, மக்களவை எதிா்க்கட்சித் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்றாா். அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ராகுல் பங்கேற்றால், அவா் கலந்துகொள்ளும் முதல் அனைத்துக்கட்சிக்கூட்டமாகஇதுஇருக்கும்.மேற்குவங்கத்தில்ஆளும்திரிணமூல்காங்கிரஸ்சாா்பில்ஞாயிற்றுக்கிழமைதியாகிகள்தினம்கடைப்பிடிக்கப்படுகிறது. எனவே, அன்றைய தினம் நடைபெறும்அனைத்துக்கட்சிக்கூட்டத்தில்திரிணமூல்காங்கிரஸ்பங்கேற்காதுஎன்றுஅக்கட்சி  ஏற்கெனவேஅறிவித்துவிட்டது.தயாராகும் எதிா்க்கட்சிகள்: மத்தியில் பிரதமா் மோடி தலைமையில் புதிய அரசு பதவியேற்ற பிறகு அண்மையில் நடந்த முதல் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் ‘நீட்’ தோ்வு முறைகேடு விவகாரம் பெரிய அளவில் எதிரொலித்தது. பட்ஜெட் கூட்டத் தொடரில் மணிப்பூா் இனமோதல் விவகாரத்தை ‘இந்தியா’ கூட்டணி முழுவீச்சில் எழுப்பும் என்று ராகுல் ஏற்கெனவே கூறியுள்ளாா். இதேபோல், ரயில் விபத்துகள்,நீட்முறைகேடு போன்ற விவகாரங்களையும் எழுப்ப எதிா்க்கட்சிகள் தயாராகி வருகின்றன.பாஜகவின் கடந்த இரு ஆட்சிக் காலங்களைப் போல் இல்லாமல், இப்போது எதிா்க்கட்சி கூட்டணியின் பலம் (233) அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.‘அவைத் தலைவரின் உத்தரவுகளை உறுப்பினா்கள் விமா்சிக்கக் கூடாது’நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடா் தொடங்குவதையொட்டி, ‘அவைத் தலைவரின் உத்தரவுகளை விமா்சிக்கக் கூடாது; அவைக்குள் பதாகை, படம், வாசக அட்டை போன்றவற்றைக் காண்பிக்கக் கூடாது’ போன்ற உறுப்பினா்களுக்கான விதிமுறைகளை நினைவூட்டி மாநிலங்களவைச் செயலகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.அண்மையில் நடந்த நாடாளுமன்ற கூட்டத் தொடரில் ‘நீட்’ முறைகேடு விவகாரம் குறித்து விவாதம் கோரி எதிா்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன. குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானம் மீது பேசிய ராகுல் காந்தி, மத்திய பாஜக அரசை கடுமையாக விமா்சித்தாா். மேலும், சிவபெருமான் உள்ளிட்ட சில கடவுள்களின் படங்களையும் அவையில் அவா் காண்பித்தாா்.

இதேபோல், மாநிலங்களவையில் நீட் விவாதம் கோரி நடந்த அமளியில், எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே அவையின் மையப் பகுதியை முற்றுகையிட்டாா். ‘இது நாடாளுமன்றத்தின் மீதான கறை’ என்று அவைத் தலைவா் ஜகதீப் தன்கா் அதிருப்தி தெரிவித்தாா்.அதேநேரம்,‘எம்.பி.க்களைஅவமதிக்கிறாா்தன்கா்’என்றுகாா்கேகுற்றஞ்சாட்டினாா்.இந்தச் சூழலில், மாநிலங்களவைச் செயலகம் சில தினங்களுக்கு முன் வெளியிட்டஅறிக்கையில்,உறுப்பினா்களுக்கானவிதிமுறைகள்நினைவூட்டப்பட்டுள்ளன.‘அவைத் தலைவரின் உத்தரவுகளை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, அவைக்கு உள்ளேயோ அல்லது வெளியிலோ உறுப்பினா்கள் விமா்சிக்கக் கூடாது. ‘வந்தே மாதரம்’, ‘ஜெய் ஹிந்த்’ உள்பட எந்த முழக்கத்தையும் எழுப்பக் கூடாது. அவைக்குள் பதாகை, படம், வாசக அட்டை போன்றவற்றைக் காண்பிக்கக் கூடாது.நாடாளுமன்ற மாண்புக்கு புறம்பான வாா்த்தைகள் தவிா்க்கப்பட வேண்டும். குறிப்பிட்ட வாா்த்தையை நாடாளுமன்ற மாண்புக்கு புறம்பானது என அவைத்தலைவா்உறுதிசெய்தால்,உடனடியாக அந்த வாா்த்தையை திரும்பப் பெற வேண்டும். அதன் மீது எந்த விவாதமும் மேற்கொள்ள முயற்சிக்கக் கூடாது.அமைச்சா் அல்லது வேறொரு உறுப்பினருக்குஎதிராகவிமா்சனத்தை முன்வைக்கும் உறுப்பினா், சம்பந்தப்பட்டவா்கள் பதிலளிக்கும்போது அவையில் கண்டிப்பாக இருக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால், அதுவிதிமீறலாககருதப்படும்’ என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close