மாவட்ட அளவிலான தடகளப் போட்டியில் வடகரை அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் முதலிடம்!ஊராட்சி மன்ற தலைவர் நேரில் பாராட்டு !! பள்ளி மாணவர்களுக்கு திருவள்ளூர் வருவாய் மாவட்ட அளவிலான தடகள போட்டி திருவள்ளூரில் நடைபெற்றது இதில் 14 வயதுக்குட்பட்ட பிரிவு தடகள போட்டியில் புழல் ஒன்றியம் வடகரை ஊராட்சி அரசு ஆதிதிராவிடர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி யில் 9ம்வகுப்பு படிக்கும் மாணவன் ஜி. முகேஷ் வெற்றி பெற்று பதக்கம் வென்றார் .
அடுத்து மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்ள இருக்கும் மாணவன் ஜி. முகேஷ் பள்ளி தலைமை ஆசிரியர் விஸ்வநாதன் பாராட்டினார். வடகரை ஊராட்சி மன்ற தலைவரும் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவரான ஜானகிராமன் நேரில் சென்று மாணவனுக்கு பொன்னாடை போர்த்தி . பரிசு வழங்கி பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் உதவி தலைமை ஆசிரியர் பூவராகவன் உடற்கல்வி இயக்குனர் சுரேஷ்குமார் உடற் கல்வி ஆசிரியர் ரமேஷ் மற்றும் முதுகலை பட்டதாரி ஆசிரியர் மனோகரன் ஆசிரியர் சுகுமார் பெண்கள் ஆதிதிராவிடர் நலத்துறைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக துணை தலைவர் தனசேகரன் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.