Others
வேலியே பயிரை மேயும் கதை @ போலீஸ்காரர்

வேலியே பயிரை மேயும் கதை ஸ்ரீவில்லிபுத்தூரில் போலீஸ்காரர் மனைவியை பாத்ரூமில் போட்டோ எடுத்த போலீஸ்காரர்
ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்துள்ள வன்னியம்பட்டி போலீஸ் சரகத்தில் உள்ளது மொட்டமலை. இங்கு 11-வது பட்டாலியன் காவலர் குடியிருப்பு உள்ளது.
இங்கு போலீஸ்காரராக திருவேங்கட புரத்தைச் சேர்ந்த சேகர் என்பவர் பணிபுரிந்து வருகிறார் .
இவரது மனைவி வீரலட்சுமி (வயது 27). குடும்பத்தினருடன் அங்குள்ள குடியிருப்பில் குடியிருந்து வருகிறார். அதே குடியிருப்பில் போலீஸ்காரராக வேலை பார்த்து வரும் மதுரை ஒத்தக்கடை சேர்ந்த ஆனந்த் (வயது 38 ) என்பவர் குடியிருந்து வருகிறார்.
சம்பவத்தன்று வீரலட்சுமி அவரது வீட்டில் பாத்ரூமில் இருக்கும்போது போலீஸ்காரர் ஆனந்த் செல்போன் மூலம் போட்டோ எடுத்துள்ளார். இதுகுறித்து வீரலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் வன்னியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீஸ்காரர் ஆனந்த் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அனைவருக்கும் பாதுகாப்பாக இருக்கும் போலீசாரே இந்த செயலில் ஈடுபட்டிருப்பது வேலியே பயிரை மேயும் கதையாக உள்ளது