Others

இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்க மத்திய அரசுக்கு வேண்டுகோள்….

NHRC- செயல்பாடுகள், அமைப்பு, நியமனம் மற்றும் உறுப்பினர்களை நீக்குதல்,  ஹெல்ப்லைன், புகார் தாக்கல் செய்தல், வேலைவாய்ப்பு, ஆட்சேர்ப்பு, SHRC ...வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மனித உரிமை நிலை என்ற தலைப்பிலான அறிக்கையை இலங்கை மனித உரிமைகள் ஆணையம் அண்மையில் வெளியிட்டுள்ளது. அதன் அறிக்கையில்வெளியிடப்பட்ட தகவல்கள் வேதனை அளிப்பதாக உள்ளன.மாயமான தமிழர்கள், பெரும் எண்ணிக்கையில் குழிகளில் கூட்டாகப் புதைக்கப்பட்டவர்கள், அச்சுறுத்தும் வகையில் தொடர் கண்காணிப்பு, நிலம் அபகரிப்பு, 1990-ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்ட முஸ்லிம்கள் மறுகுடியமர்வு, மதச் சுதந்திரம், வளர்ச்சிப் பணிகள், அந்தப் பகுதி மக்களின் வாழ்வாதாரம் உள்ளிட்டவை குறித்து மனித உரிமை ஆணையம் ஆய்வு மேற்கொண்டது.போர் முடிந்து 17 ஆண்டுகள் கடந்தபின்னரும்வடக்குமற்றும்கிழக்குமாகாணங்களில்ராணுவவீரர்கள்பெருமளவில்குவிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளது தங்களது மறுவாழ்வுக்கும் பொருளாதாரமீட்சிக்கும்தடையாகஉள்ளதாகமக்கள்கருதுகின்றனர்.தமிழர்களிடம்இருந்துவலுக்கட்டாயமாகப் பறிக்கப்பட்ட நிலங்களை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். தேசிய பாதுகாப்பு என்பதை நில அபகரிப்புக்கு காரணமாக கூறுவதை அரசு தவிர்க்க வேண்டும்’ என்று அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.சரியாக 2 ஆண்டுகளுக்கு முன்னர், தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் யாழ்ப்பாணத்தின் புறநகர்ப் பகுதியான பசையூரில் கடந்த 2024 நவ. 10-ஆம் தேதி நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசிய அதிபர் அநுரகுமார திசாநாயக, ‘தொல்லியல் துறை, வனத் துறையால்வலுக்கட்டாயமாககைப்பற்றப்பட்டநிலங்கள்தமிழர்களிடம்மீண்டும்ஒப்படைக்கப்படும்;மாகாணகவுன்சில்களுக்குத் தேர்தல் நடத்தப்படும்; தமிழர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்துவோம்’ என்பன உள்ளிட்ட பல வாக்குறுதிகளைஅளித்தார்.அவரின்வாக்குறுதிகளை தமிழர்கள் நம்பியதால், இதற்கு முன் எப்போதும் இல்லாத வகையில் தமிழர் அல்லாத கூட்டணியான அவரது தேசிய மக்கள் சக்தி (என்பிபி) கூட்டணி வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள 28 இடங்களில் 12 இடங்களைக் கைப்பற்றியது. மட்டக்களப்பு தவிர தமிழர்கள் அதிகம் வசிக்கும் ஏனைய 4 மாவட்டங்களில் என்பிபி முத்திரை பதித்தது. ஆனால், அவரது வாக்குறுதிகள் இன்னமும்கானல்நீராகவேதொடர்கின்றன.பாதுகாப்புப்பணிகளுக்குத் தேவைப்படாத, போரின்போது கைப்பற்றப்பட்ட நிலங்களைப் பாதுகாப்புப் படைகள் திரும்ப ஒப்படைப்பதை விரைவுபடுத்த வேண்டும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் உள்ள அதிபர் திசாநாயக கடந்த ஆகஸ்டில் அறிவுறுத்தி உள்ளார். ஆனால், இந்த அறிவுறுத்தல் இன்னும் செயல் வடிவம் பெறவில்லை.இதற்குக் காரணம், நில உரிமையாளர்களைக் கண்டறிய முடியவில்லை, உரிய ஆவணங்கள் தமிழர்களிடம் இல்லை என்று அமைச்சக செய்தித்தொடர்பாளர்பிரிகேடியர்ஃபிராங்க்ளின்ஜோசப்கூறுகிறார்.போரின்போதுகைப்பற்றப்பட்ட நிலங்களில் பெரும் பகுதி இப்போதும் ராணுவம் வசமே உள்ளது. ராணுவம் தவிர, தொல்லியல் துறையினரும், வனத் துறையினரும் தமிழர்களின் நிலங்களைக் கைப்பற்றி வருகின்றனர்என்கிறார்இலங்கைதமிழ்அரசுக்கட்சிஎம்.பி.துரைராசாரவிகரன்.இலங்கைசுதந்திரத்துக்குப் பின்னர், கடந்த 78 ஆண்டுகளில் கிழக்கு மாகாணத்தில் சிங்களர்களின் குடியேற்றம் 700 சதவீதம் அதிகரித்துள்ளதாகக் குற்றஞ்சாட்டுகிறார் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மற்றொரு எம்.பி.யான சாணக்கியன் ராசமாணிக்கம்.நிலம் தவிர, இப்போது தமிழர்களின் கால்நடைகளும் குறிவைத்து வேட்டையாடப்படுகின்றன. இதன்மூலம் தமிழர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்படுகிறது என்கிற விமர்சனங்களும் எழுந்திருக்கின்றன. இதைத் தடுத்து நிறுத்தும் தார்மிக உரிமையும் பொறுப்பும் இந்தியாவுக்கு இருக்கிறது. காரணம், பாதிக்கப்படுபவர்கள் நமது தொப்புள்கொடி உறவுகள்.இலங்கைக்குப் பல விதங்களிலும் இந்தியா உதவி வருகிறது. கடந்த 2022-ஆம் ஆண்டு இலங்கை பெரும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்தபோது 400 மில்லியன் டாலர், கடந்த 2025 நவம்பரில் டித்வா புயல் பெரும் சேதங்களை ஏற்படுத்தியபோது 450 மில்லியன் டாலர் என நிதி உதவிகளை இந்தியா அளித்தது.மாதிரிகிராமம்திட்டத்தில்,இலங்கையின்25மாவட்டங்களிலும் தலா 24 வீடுகள் கட்டிக் கொடுக்கும் திட்டத்தின் கீழ் கடந்த அக்டோபர்வரை22மாவட்டங்களில் பணிகள் முடிந்து வீடுகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அந்த நாட்டின் மீன் வளத் துறைக்காக 430 மின்சார இரு சக்கர வாகனங்களுடன் இலங்கை மதிப்பில் ரூ. 26.50 கோடி நிதி உதவியை இந்தியாவழங்ககடந்தஅக்டோபரில்ஒப்பந்தம்மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்தப்பின்னணியில், இலங்கையில் தொடர்ந்து இன்னல்களைச் சந்தித்துவரும் தமிழர்களின் துயர் தீர்க்க மத்திய அரசு தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இலங்கைத் தமிழர்கள் ஓரிரண்டு ஆண்டுகளாக அல்ல, 1980-களில் இருந்து கடந்த 46 ஆண்டுகளாகப் பெரும் துயரத்தை அனுபவித்து வருகின்றனர். இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்து இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது மத்திய அரசின் கடமையாகும்.

Related Articles

Back to top button
Close
Close