Others

‘பெரியார் அறிவுலகம்’ திறந்து வைக்கப்பட்டுள்ளதுபற்றி அமைச்சர் ஆதவ்அர்ஜுனா– விளக்கம்

அதிமுகவின் இன்றைய நிலைக்கு எடப்பாடி பழனிசாமியே காரணம் – ஆதவ் அர்ஜுனா சாடல்  - தமிழ்நாடுபுதிதாகப் பொறுப்பேற்ற அரசு, முந்தைய அரசு கொண்டுவந்தது என்பதற்காகவே, ஒரு திட்டத்தையோ… கட்டுமானத்தையோ நிறுத்தினால்தான் அதில் குற்றம் சொல்ல முடியும். மக்கள் நலனை மட்டும் கருத்தில்கொண்டு, முந்தைய அரசு கொண்டு வந்த திட்டங்கள் என்றாலும், அதை காழ்ப்புணர்ச்சி இல்லாமல் தொடரும் ஒரு அரசாங்கத்தை யார் குறை சொல்ல முடியும்? என்ன குற்றம் காண முடியும்? அப்படி செய்வதற்கு யாருக்கு என்ன தார்மீக உரிமை இருக்கிறது? தமிழ்நாட்டு மக்களின் புதிய நம்பிக்கையாக அமைந்துள்ள தவெக அரசு முந்தைய அரசுகள் கொண்டு வந்த திட்டங்களில், மக்கள் நலனுக்கானவை என்பனவற்றை அப்படியே தொடர்கிறது; குறைபாடுள்ள திட்டங்களை மேம்படுத்திசெயல்படுத்துகிறது;பாதியில்நிற்கும்திட்டங்களைதொடர்ந்துசெயல்படுத்துகிறது.அதிமுகஆட்சியில்கொண்டுவரப்பட்டஅம்மாஉணவகம்,திமுகஆட்சியில்கொண்டுவரப்பட்ட காலை உணவுத் திட்டம் போன்றவை, மக்கள் நலனே முக்கியம் என்ற அடிப்படையில் முதல்வர் விஜய் தலைமையிலான தவெக அரசும் செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. மக்களுக்காக… மக்களின் வரிப்பணத்தில் தொடங்கப்பட்ட திட்டங்கள் அவை. அந்த அடிப்படையில்தான், கோவை காந்திபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள, ‘பெரியார் அறிவுலகம்’ நூலகத்தையும் முதல்வர் விஜய் திறந்து வைத்துள்ளார். கோவை மக்களுக்கு மட்டுமல்ல… ஒட்டுமொத்ததமிழகமக்களுக்கும்மாணவர்களுக்கும்ஆய்வாளர்களுக்கும்கல்வியாளர்களுக்கும் காலம் கடந்து ‘பெரியார் அறிவுலகம்’ பயன் அளிக்கும்.அதை கோவை மக்கள் உள்பட அனைவரும் பயன்படுத்தி பயன்பெற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில், குறுகிய மனப்பான்மைக்கு இடம்கொடுக்காமல், எந்தவித தம்பட்டமும் அடித்துக்கொள்ளாமல் இன்று ‘பெரியார் அறிவுலகம்’ திறந்து வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் ஆதவ் அர்ஜுனா  கூறியுள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close