Others

டிரம் கட்சிக்கு எலான் மஸ்க் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.2641.5 கோடி) பணம் நன்கொடை!

புதிய கட்சியை ஆரம்பித்தார் எலான் மஸ்க் - கனடாமிரர்அமெரிக்காவில் நவம்பர் 3ம் தேதி, இடைக்காலத் தேர்தல் நடைபெற உள்ளது, இதில் பிரதிநிதிகள் சபை மற்றும் செனட்சபையில்குடியரசுக்கட்சியின்பெரும்பான்மையைத் தக்கவைக்க கடும் போட்டி நிலவுகிறது. இதில், டிரம்ப் கட்சியை எப்படியாவது கரைசேர்த்துவிட வேண்டும் என்ற நோக்கில் களமிறங்கியுள்ள தொழிலதிபர் எலான் மஸ்க், ஜூலை மாதத்தில் இருந்து மட்டும் 276 மில்லியன் டாலருக்கும் மேல் (சுமார் ரூ.2641.5 கோடி) வாரி வழங்கியுள்ளார். நடப்பு தேர்தல் களத்தில் தனிநபர் ஒருவரால் வழங்கப்பட்ட மிக பிரம்மாண்டமான நன்கொடை இதுவாகும்.மஸ்க் வழங்கிய நிதியில் பெரும் பகுதியான 158 மில்லியன் டாலர் (சுமார் ரூ.1,512 கோடி), செனட் தேர்தல் நிதியான ‘செனட் லீடர்ஷிப் பண்ட்’ அமைப்புக்கு நேரடியாகச் சென்றுள்ளது. இதுதவிர, தனது சொந்த அரசியல் நடவடிக்கைக் குழுவான ‘அமெரிக்கா பிஏசி’ மூலமாகவும், பிற குடியரசுக் கட்சி வேட்பாளர்களின் பிரசாரக் குழுக்களுக்கும் கோடிக்கணக்கான டாலர்களை செலவு செய்துள்ளார்.ஏற்கனவே அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்பிற்கு தீவிர ஆதரவு தெரிவித்து வந்த மஸ்க், தற்போது இடைக்காலத் தேர்தலிலும் தனது பணபலத்தைக் கொண்டு குடியரசுக் கட்சிக்கு முட்டுக்கொடுப்பது ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்குகிறது என ஜனநாயகக் கட்சியினர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அமெரிக்க அரசியலில் பெரும் பணக்காரர்களின் ஆதிக்கம் தலைதூக்குவதாகப் புகார் எழுந்துள்ள நிலையில், இந்த விவகாரம் சர்வதேச அளவில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close