fbpx
RETamil Newsஅரசியல்தமிழ்நாடு

சென்னையில் 99.9% ஆசிரியர்கள் பணிக்கு திரும்பிவிட்டனர் – முதன்மை கல்வி அதிகாரி

சென்னையில் 99.9% ஆசிரியர்கள் பணிக்கு திரும்பிவிட்டனர். 4 ஆசிரியர்கள் மட்டுமே இன்னும் பணிக்கு திரும்பவில்லை. சென்னையில் அரசு பள்ளிகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது என முதன்மை கல்வி அதிகாரி திருவளர்செல்வி கூறி உள்ளார்.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவது, இடைநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாட்டை களைவது உள்ளிட்ட 9 கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் வேலை நிறுத்தம் மற்றும் போராட்டங்கள் தொடர்ந்து 7 வது நாளாக நடைபெறுகின்றன.

நேற்று ஆசிரியர்கள் அனைவரும் பணிக்கு திரும்ப வேண்டும் என்றும், பணிக்கு திரும்பாத ஆசிரியர்கள் இடங்களை காலி பணியிடமாக அறிவித்து அதில் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என இறுதி கெடு விதித்து ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை விடுத்தது. புதிய ஆசிரியர்களை நியமிப்பதற்கான பணிகளையும் பள்ளி கல்வித் துறை செய்து வருகிறது. அவர்களுக்கான சம்பளம் ரூ.10ஆயிரம் என அறிவித்துள்ளதால், வேலை இல்லாமல் இருக்கும் ஆசிரியர்கள் இப்பணிகளுக்கு ஆர்வமுடன் விண்ணப்பிக்க தொடங்கியுள்ளனர். இது ஆசிரியர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அதோடு மட்டுமல்லாமல் பணிக்கு மீண்டும் திரும்பினால் ஏற்கனவே உள்ள பணியிடங்களை வழங்காமல் வேறு இடங்களுக்கு பணியிட மாற்றம் செய்யவும் முடிவு செய்திருப்பதாக பள்ளி கல்வித் துறை ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப இன்று காலை 9 மணி வரை அவகாசம் வழங்கி பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டது. காலை 9 மணிக்குள் ஆசிரியர்கள் பள்ளிக்கு திரும்பாவிட்டால் அப்பணியிடங்கள் காலிப்பணியிடமாக அறிவிக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

இதனையடுத்து திருச்சியில் 80 சதவீத ஆசிரியர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பி உள்ளனர் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலக வட்டாரங்கள் தகவல் தெரிவித்து உள்ளது.

தமிழகத்தில் மேல்நிலை மற்றும் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் 95 சதவீதம் பேர் பணிக்கு திரும்பினர் என பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கூறி உள்ளார்.

சென்னையில் 4 ஆசிரியர்கள் மட்டுமே இன்னும் பணிக்கு திரும்பவில்லை, 99.9% ஆசிரியர்கள் பணிக்கு திரும்பிவிட்டனர் . சென்னையில் அரசு பள்ளிகள் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளது என முதன்மை கல்வி அதிகாரி திருவளர்செல்வி கூறி உள்ளார்.

போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 1200 ஐ தாண்டியது.

Related Articles

Back to top button
Close
Close