RETamil Newsதமிழ்நாடு
தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 1000-ஐ தாண்டியது:பீலா

சென்னை: தமிழகத்தில் மேலும் கூடுதலாக 106 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என தமிழக சுகாதாரத் துறை செயலாளர் பீலா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நேற்று வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 969ஆக இருந்தது. இந்த நிலையில் பலி எண்ணிக்கை 10ஆக இருந்தது.
இன்றைய தினம் கொரோனா நிலவரம் குறித்து கூறுவதற்காக செய்தியாளர்களை தமிழக சுகாதாரத் துறை செயலாளர் பீலா செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில் தமிழகத்தில் இன்று 106 பேருக்கு புதிதாக கொரோனா பாதித்துள்ளது.
இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1075 ஆக உயர்ந்துள்ளது.
இன்று ஒருவர் உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கையும் 11 ஆக உயர்ந்துள்ளது என்று பீலா கூறினார்.















